எதிரிகளின் தொல்லை நீங்க நீங்க செல்ல வேண்டிய கோயில்!

191

எதிரிகளின் தொல்லை நீங்க நீங்க செல்ல வேண்டிய கோயில்!

நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று நமது உறவினர்களை நமக்கு எதிரிகளாக வருவார்கள். தொழில் செய்யும் இடத்தில் தொழிலுக்கு போட்டியாக வருபவர் எதிரியாக வருவார். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளோ அல்லது நமக்கு கீழே வேலை பார்ப்பவர்களோ எதிரிகளாக வருவார்கள். ஒவ்வொரு இடத்திலும் இடத்திற்கு தகுந்தவாறு எதிரிகள் முளைத்துவிடுவார்கள். நிலம், இடம், வீடு, வாகனம், காதல் என்று ஒவ்வொன்றிலும் எதிரிகள் தலையீடு இருக்கத்தான் செய்யும். சரி, அதற்கு என்ன செய்வது என்று ரொம்ப யோசிக்கவே வேண்டும்.

எதிரிகளின் தொல்லை இருக்கவே இருக்கக் கூடாது என்பதற்கும், எதிரிகளின் பயம் நீங்கவும் நாம் சென்று வழிபட்டு வர வேண்டிய கோயில்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன கோயில், எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.

 1. அங்காளம்மன் திருக்கோயில் – மேல்மலையனூர், விழுப்புரம்.
 2. அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் – பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
 3. காளமேகப்பெருமாள் திருக்கோயில் – திருமோகூர், மதுரை
 4. காலபைரவர் திருக்கோயில் – கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி.
 5. காளிகாம்பாள் திருக்கோயில் – பாரிஸ் (தம்பு செட்டித்தெரு), சென்னை.
 6. தில்லை காளியம்மன் திருக்கோயில் – சிதம்பரம்.
 7. தட்சிணகாசி உன்மத்த கால பைரவர் திருக்கோயில் – அதியமான் கோட்டை, தர்மபுரி.
 8. பிரத்யங்கராதேவி திருக்கோயில் – அய்யாவாடி, கும்பகோணம்.
 9. மாசாணியம்மன் திருக்கோயில் – ஆனைமலை, பொள்ளாச்சி (கோயம்புத்தூர்)
 10. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆணைமலை.
 11. முனியப்பம் திருக்கோயில் – பி.அக்ரஹாரம், பென்னாகரம், தர்மபுரி.
 12. ரேணுகாம்பாள் திருக்கோயில் – படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.
 13. வெட்டுடையர் காளியம்மன் திருக்கோயில் – கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம்.

ஆகிய கோயில்களுக்கு சென்று வர, உங்களது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு எதிரிகளின் தொந்தரவு இருக்கவே இருக்காது.