ஏழரை சனியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

202

ஏழரை சனியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

சனியைப் போன்று கெட்டுப்பாரும் இல்லை, சனியைப் போன்று கொடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். கர்மா யாரையும் சும்மா விடாது என்பது போன்று நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்கள் எல்லாம் அவர்களது பேர, பிள்ளைகளைத் தான் வந்து சேரும். அதே போன்று தான் பெற்றோர்கள் செய்யும் பாவ பலன்கள் எல்லாம் அவர்களது பிள்ளைகளையும் சேர்த்து பாதிக்கும். ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு ஏழரை சனி நடந்தால், அந்த வீடு அவ்வளவு தான். சுக்குநூறாக போய்விடும். கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், பிரச்சனைகள் என்று எல்லாமே அவர்கள் வாழ்வில் நடக்கும்.

இது போன்ற ஒரு தாக்கத்திலிருந்து தப்பிக்க, அதுவும் ஏழரை சனியின் பாதிப்பிலிருந்து விடுபட தினமும் இந்த பரிகாரங்களை செய்து வர வாழ்வில் விமோட்சனம் கிடைக்கும். அது என்ன பரிகாரம் என்று பார்க்கலாம் வாங்க….

 1. அரசமரத்தடி பிள்ளையாரை வழிபடுதல் வேண்டும்.
 2. சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு தினமும் உணவளிக்க வேண்டும்.
 3. வாரந்தோறும், சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கும் அவரது குருவாக விளங்கும் கால பைரவருக்கும் விரதமிருந்து எள் விளக்கு மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
 4. வீட்டில் தினந்தோறும் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
 5. மகாவிஷ்ணுவின் அம்சமாக திகழும் வலம்புரி சங்கினை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர வேண்டும்.
 6. சுத்தம் சுகம் தரும் என்பதற்கேற்ப, எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
 7. நேர்மையாக வாழ வேண்டும். யார் மீதும், எதும் மீதும், குறிப்பாக பெண் மீது ஆசை கொள்ளக் கூடாது.
 8. தகாத வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது.
 9. துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவரை சனி பகவான் என்றுமே பார்ப்பதில்லை.
 10. ருத்ராட்ச மாலையை யாராலும் அவ்வளவு எளிதில் அணிந்து கொள்ள முடியாது. இறைவன் சிவபெருமான் மீது பற்று கொண்டவரால் மட்டுமே அணிந்து கொள்ள முடியும்.
 11. மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
 12. திருநள்ளாறு, குச்சனூர், திருகொள்ளிக்காடு போன்ற தலங்களுக்கு சென்று சனிபகவானை வழிபட்டு வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வர கஷ்டங்கள், துயரங்கள், துன்பங்கள், வறுமை, பணக்கஷ்டம் ஆகியவற்றிலிருந்தும், சனி பகவானின் பார்வையிலிருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.