ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!

113

ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!

பொதுவாக நமது வாழ்க்கையில் நமக்கு பிடித்தவர்கள் இருக்கும் போது பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எப்போதெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோமோ அப்போதெல்லாம் அவர்களது குறுக்கீடு இருக்கும்.

ஏதாவது ஒரு வகையில் நமக்கு இடையூறு செய்து கொண்டிருப்பார்கள். தீய சக்திகளை கூட ஏவி விடுவார்கள். அவர்களது பார்வை நம் மீது பட்டாலே நமது வாழ்க்கையில் ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும். அதிலிருந்து தப்பிப்பதற்கு நாம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

மருதாணி விதை, சாம்பிராணி, வெண் கடுகு, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி, குங்கிலியம் பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குங்கிலியம், சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ளவற்றை சேர்த்து கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தீபம் போடவும்.

தொடர்ந்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் செய்து வர கண்டிப்பாக பலன் உண்டு. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, தீய சக்திகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

வீட்டில் நிம்மதி இல்லையா?

எப்போது பார்த்தாலும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமையின்மை, தூக்கமின்மை, வாக்குவாதங்கள் என்று ஒரே பிரச்சனையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்த பரிகாரத்தை செய்து வர வாழ்வில் சுபீட்சம் உண்டாகும். வெண் கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப சமூலம், நொச்சி சமூலப் பொடி, குங்கிலியம் மற்றும் தேவதாறு ஆகியவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் சிறிது சாம்பிராணி போட்டு கலந்து காலை அல்லது மாலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் தீபம் ஏற்றி வர வீட்டிலுள்ள தீய சக்தீகள் விலகும்.

வெறும் 2 நாட்களிலேயே அதற்கான பலனை அனுபவிக்கலாம். நாய்க் கடுகு மற்றும் வெண் கடுகு ஆகியவை பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. வில்வம் சிவனுக்குரியது. வேம்பு அம்மனுக்குரியது. அறுகம்புல் விநாயகருக்குரியது. இந்த வெண் கடுகு, நாய்க் கடுகு, அறுகம்புல் பொடி, நொச்சி சமூலப் பொடி என்று அனைத்தையும் நெருப்பில் போட்டு தீபம் ஏற்ற பைரவ, சிவ பெருமான் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள் என்பது நம்பிக்கை.