ஒரே குடும்பம் ஒரே ராசியாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்!

134

ஒரே குடும்பம் ஒரே ராசியாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்!

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே ராசியாக இருந்தால், அவர்களுக்கு ராகு, கேது, ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, மோசமான தசா பலன்கள் நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். இவ்வளவு ஏன், மரணத்தின் எல்லை வரை சென்று வருவார்கள். திடீர் விபத்து, இழப்புகள் கூட நிகழலாம்.

இது போன்ற காரணத்திற்கு தான் கணவனும் – மனைவியும் ஒரே ராசியாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக பெரியவர்கள் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். பிறப்பு என்று ஒன்று இருந்தால், கண்டிப்பாக இறப்பு என்று ஒன்று இருக்கம் அல்லவா. ஆனால், அது விதியைப் பொறுத்தது.

பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசிக்காரர்களாக அமைந்துவிடுகிறார்கள். அப்படி அமையும் ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டால், திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடுவது தான் சிறந்தது. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட வேண்டும். மேலும், சம்ஹார (கடலோரமாக உள்ள கோயில்) ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்று பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரே ராசிக்கார்ர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி நடந்தால் குடும்பத்திலிருந்து யாரேனும் ஒருவர் பிரிந்திருக்க வேண்டும். உதாரணமாக தற்போது நடக்கும் காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தனுசு ராசிக்காரர்கள். அவர்களை வைத்து சொல்ல வேண்டுமென்றால், தந்தைக்கும் தனுசு ராசி, மகனுக்கும் தனுசு ராசி என்றால், இருவரில் யாரேனும் ஒருவர் (மகனாக இருந்தால் சிறப்பு) வீட்டை விட்டு பிரிந்து சென்றால், அந்த குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறையும்.

கணவன் – மனைவியாக இருந்தால் பணியிடை மாற்றம் செய்து கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலம் சண்டை, சச்சரவு, விவாகரத்து ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். மேலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வாகனத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படியில்லை என்றால் விபத்து ஏற்பட்டு இழப்பு நேரிட வாய்ப்பிருக்கிறது.