கடனும், கஷ்டமும் காணாமல் போக செய்ய வேண்டிய பரிகாரம்!

319

கடனும், கஷ்டமும் காணாமல் போக செய்ய வேண்டிய பரிகாரம்!

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவும், கிரக நிலைகளின் பெயர்ச்சி காரணமாகவும், அவர்களது வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. செய்த புண்ணியத்திற்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவத்திற்கு கண்டிப்பாக பலன் கிடைத்தே தீரும். அதற்காக புண்ணியத்திற்கு பலன் கிடைக்காதா? என்று கேட்காதீர்கள். கிடைக்கும், ஆனால், காலதாமதம் கூட ஆகலாம். ஆனால், பாவத்திற்கு காலதாமதம் இல்லாமல் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் இருக்கும் கஷ்டமும் கடனும் காணாமல் போக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். கர்ம வினைகள் நீங்க சிவனே கதி என்று இருக்க வேண்டும். எப்போதும் ஓம்நமசிவாய மந்திரம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். சிவனை நினைத்து தான் இந்தப் பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 11 நாட்கள் இந்தப் பரிகாரத்தை செய்ய வேண்டும். 11 நாட்களில் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்போது கையில் 3 வரமிளகாய் மற்றும் 3 மிளகு இந்த இரண்டையும் எடுத்துச் செல்ல வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று சிவனை நினைத்து கோயிலை 3 முறை வலம் வர வேண்டும்.

வழிபாடு செய்த பிறகு நந்தீஸ்வரர் இருக்கும் இட்த்தில் நின்று கொண்டு சிவபெருமானை பார்த்தவாறு நின்று எடுத்துச் சென்ற மிளகு மற்றும் வரமிளகாயை உங்களது உள்ளங்கையில் வைத்து உங்களது தலையை வலது புறமாக மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு அதனை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

வீட்டிற்கு வந்து ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கட்டி கற்பூரம் ஏற்றி வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் மிளகாய் ஆகியவற்றை போட்டு விட வேண்டும். இதையடுத்து அதனை வீட்டிற்கு வெளியில் வைத்து எரித்துவிட வேண்டும். 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக கர்ம வினைகள் குறையும். கர்ம வினைகள் குறைந்துவிட்டால் நல்லது நடக்க தொடங்கும்.