கடன் தொல்லை நீங்க எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

145

கடன் தொல்லை நீங்க எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் கடன் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு கடன் இருந்திருக்கும். கிரக நிலைகளின் மாற்றம் காரணமாக ஒவ்வொருவருக்கும் கடன் சுமை ஏற்படுகிறது. சனியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்.

அப்படி கடன் தொல்லையிலிருந்து விலகுவதற்கு சில வழிகள் உண்டு. அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ யாரிடம் அதிகமாக கடன் பட்டியிருக்கிறமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்.

அப்படி திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறிது சிறிதாக குறைந்து முற்றிலும் கடனே இல்லாமல் போய்விடும். இந்த லக்ன கணக்கு தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு அல்லது சனிக்கிழமையிலோ, குளிகை நேரத்திலோ சென்று கடனை திருப்பிக் கொடுக்கலாம். அப்படியில்லை என்றால் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படி செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.