கடன் பிரச்சனைகள் தீர, வீட்டில் வறுமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

122

கடன் பிரச்சனைகள் தீர, வீட்டில் வறுமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கடன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் செல்வ கணபதி வழிபாடு செய்வதால் அவர்களுடைய கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். செல்வகணபதி வழிபாடு முறை, இந்த பூஜையை முறைக்கு நெய்வேத்தியம் அதிகமாக எதுவும் தேவைப்படாது. சாதாரணமாக தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் போதுமானது.

இந்த பூஜையின் ஐ வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். காலை செய்வது மிகவும் நல்லது. பூஜையில் ஐந்து கார்த்திகை தீபத்தில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். பூசை முடித்த பிறகு விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.

இவ்வாறு நீங்கள் ஒன்பது வாரங்கள் செய்து வரும் போது உங்களுடைய கடன்கள் படிப்படியாக குறையும். இந்தக் கடன் பிரச்சனை நீங்கள் இந்தப் பூஜை செய்வதால் மட்டும் நிவர்த்தி ஆகுவது இல்லை. அந்தக் கடனைத் தீர்க்க உங்களுக்கு வருமானம் இருக்க வேண்டும்.

இந்த பூஜை செய்வதினால் வீட்டில் செல்வம் நிறையும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். நீங்கள் வேலை செய்த இடத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் இந்த பூஜை செய்வதினால் உங்களுடைய பணம் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய கடன் நீங்கள் கொடுத்த கடன் உங்களுக்கு வரவேண்டிய பணம் இவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

இந்தப் பூஜை தொடங்கும் நாளிலிருந்து 9 வாரங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டில் நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். வாழையிலையில் அவல் பொரி கடலை அச்சுவெல்லம் படையலாக வைக்க வேண்டும் .

வைத்து வணங்கிய பிறகு கோவிலுக்குச் சென்று செல்வ கணபதியை வணங்க வேண்டும். கோவிலில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நைவேத்தியங்கள் கொடுக்கலாம். இல்லை என்றால் பூஜை பொருட்கள் மட்டும் போதுமானது.