கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

147

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

எல்லோருக்கும் ஒரு வழியில் கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். கிரக நிலைகளின் பெயர்ச்சி காரணமாக சிறிய அளவிலான கடனாகவோ அல்லது பெரிய அளவிலான கடனாகவோ இருக்கலாம். சிலரால் எளிதில் சமாளித்துவிட முடியும். சிலரால் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் கடன் மேல் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

கடனை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். மிக அத்தியாவசியமான அவசியமான செலவுக்கு மட்டும் தான் கடனை வாங்க வேண்டும். அதுவும் உயிர் போற அவசரத்தில் கடன் வாங்குவது தவறு என்று சொல்லுவார்கள்.

உயிரே போனாலும் கடன் வாங்க கூடாது என்று கூட சொல்லுவார்கள். இப்படி எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்த விஷயங்களையும் தாண்டி, நாம் கடன் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்.

நீங்கள் எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் வரக்கூடிய வருமானத்தை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கையில் இல்லாத வருமானத்தை வைத்து அடுத்த, வருடத்திற்குள் இந்த கடனை அடைத்துக் கொள்ளலாம் என்று யோசித்து யாருமே கடன் வாங்காதீர்கள்.

கடன் வாங்க கூடாது என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டவர்கள், வாழ்வில் ஜெயித்திருக்கிறார்கள். காசே இல்லை என்றாலும் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் கடன் இருந்தால் நிம்மதி இருக்காது. சரி இந்த கடனை வாங்கி விட்டோம். அதிலிருந்து தப்பிக்க தாந்திரீக ரீதியான சின்ன பரிகாரம் ஒன்று உங்களுக்காக இதோ.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பச்சரிசி, பச்சை பயிறு இந்த இரண்டு பொருட்கள் தான். பச்சரிசியையும் பச்சை பயிரையும் நன்றாக அரைத்து பொடி செய்து இரண்டையும் ஒன்றாக கலந்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.  தவறு கிடையாது. இந்த பொடியை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் கலக்க வேண்டும்.புதன்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களுக்கு தலைக்கு குளிக்க வேண்டும்.

தலைக்கு குளிக்க கூடிய வெதுவெதுப்பான சுடுதண்ணீராக இருந்தாலும் அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மாவை 1 ஸ்பூன் அளவு போட்டு கலந்து ஐந்து நிமிடம் விட்டுவிடுங்கள். அதன் பின்பு நீங்கள் எப்போதும் தலைக்கு குளிப்பது போல ஷாம்பு, சோப்பு போட்டே குளிக்கலாம். குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் இந்த பச்சை பயிறு பச்சரிசி மாவு சேர்த்த தண்ணீராக இருக்கட்டும்.

நீங்கள் கிழக்கு பார்த்தவாறு உங்களுடைய குளியலை மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் வரக்கூடிய இரண்டு தினங்களில் இப்படி குளித்து வந்தாலே உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும். (இப்படி குளித்து விட்டு வந்து வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து விடக்கூடாது. கடனை அடைப்பதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்).

அதில் வரும் தடைகளை தகர்ப்பதற்கு பரிகாரம் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். அவ்வளவு தான். ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த பரிகாரத்தை பின்பற்றலாம். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப பரிகாரத்திற்கு சீக்கிரம் பலன் கிடைக்கும்.

அதிகபட்சம் 48 வாரத்திற்குள் நீங்கள் ஒரு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.