கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

103

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

வாழ்க்கையில் வரக்கூடிய அத்தனை பிரச்சனைக்கும் தீர்வு காண சாஸ்திர ரீதியாக நமக்கு நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் நம்பிக்கையோடு பின்பற்றி வருபவர்களுக்கு நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும். இருப்பினும் இப்படி சாஸ்திர ரீதியான பரிகாரங்களை பின்பற்றும் போது இதனுடன் ஒரு சில நல்ல காரியங்களையும் நீங்கள் செய்து வர வேண்டும். அப்போதுதான் பரிகாரத்தின் மூலமும் பலனை சீக்கிரமாக பெறலாம்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், உங்களுடைய வீட்டில் திருமண வயதில் ஒரு பெண் அல்லது ஆண் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதற்கு தேவையான பணம் காசு உங்களிடம் உள்ளது. நகை உள்ளது. ஆனால் திருமண யோகம் மட்டும் வரவில்லை எனும் பட்சத்தில், திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு தம்பதிக்கு நீங்கள் உதவி செய்து அதாவது பண உதவி செய்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தோ திருமணத்தை நடத்தித் தர வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய திருமணத்தடை விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்குவது பெரிய தவறாக சொல்லப்படவில்லை. கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. ஆக உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு கடனை வாங்கி வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.

ஆனால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல், பழைய கடனை அடைப்பதற்கு மீண்டும் புதிய கடனை வாங்கும் தவறை மட்டும் ஒரு நாளும் செய்து விடாதீர்கள். இப்படி கடனுக்கு மேல் கடனை வாங்கி கொண்டே சென்றால், என்னதான் பரிகாரம் செய்தாலும் கடனில் இருந்து கடைசி வரை மீள முடியாமல் போய்விடும்.

கஷ்டம் என்பது இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அடுத்தவர்களை பார்க்கும்போது நமக்கு மட்டும் தான் கஷ்டம். இவர்களெல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று மட்டும் நாம் சிந்திக்கவே கூடாது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, அவரவருக்கென்று கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.

அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நாமும் சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அந்த சந்தோஷம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு பொறாமையோடு சிந்திக்கவே கூடாது. இந்த ஒரு நல்ல சிந்தனை நமக்குள் வந்து விட்டால் நம்முடைய குடும்பத்திற்கும் சகல சௌபாக்கியங்கள் தேடி வந்துவிடும்.

சரி, மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் பொதுப்படையாக நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள். இதோடு சேர்த்து செய்ய வேண்டிய சாஸ்திர ரீதியான ஒரு பரிகாரத்தை இந்தப் பதிவில் காண்போம்.

லட்சுமி நரசிம்மரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் செய்யுங்கள். மாலை வழக்கம் போல பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு டம்ளர் பசும்பாலை நிவேதனமாக வைத்து விட வேண்டும்.

உங்களுடைய வீட்டில் லட்சுமி நரசிம்மரின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் லட்சுமி நரசிம்மரை நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அந்த தீபசுடர் தான் லட்சுமி நரசிம்மர் என்று நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லலாம்.

தீபத்திற்கு முன்பு ஒரு விரிப்பு விரித்து சமணம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். ‘லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு உங்களுக்கு எந்த பிரச்சனை தீர வேண்டுமோ அதைப் பிரார்த்தனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி, திருமணம் நடக்க வேண்டும் என்றாலும் சரி, ஏதாவது ஒரு வேண்டுதலுக்காக இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைக்கு நல்லது ஒரு தீர்வை அந்த லட்சுமி நரசிம்மர் காட்டிக் கொடுப்பார். வழிபாடு முடிந்தவுடன் நெவேதியமாக வைத்த பாலை வீட்டில் இருப்பவர்கள் குடிக்கலாம்.