கண்திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் – பகுதி 1!

136

கண்திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் – பகுதி 1!

படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களது பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.

காத்து கருப்பை விரட்டும் கருப்பு நிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும்.

பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோயிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி:

சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது.

அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிபடுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிபடும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னதான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல, வெளியில் இருந்து வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.