கண் திருஷ்டிக்கு கடல் தண்ணீர் பரிகாரம்!

178

கண் திருஷ்டிக்கு கடல் தண்ணீர் பரிகாரம்!

கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி மட்டும் படக்கூடாது என்று சொல்வார்கள். இது நமது முன்னோர்களின் அனுபவம். தீய எண்ணங்களின் வெளிப்பாடுதான் கண் திருஷ்டி. இதன் காரணமாக, குடும்பத்தில் தொடர்ந்து கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டேயிருக்கும். கண் திருஷ்டி பட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வலுவிழந்து பலவீனமாக காணப்படும். இதற்கு கடல் தண்ணீர் தான் உரிய தீர்வாக விளங்குகிறது.

கடல் தண்ணீரால் குளித்தால் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் ஆகிய 7 சக்கரங்களும் பலம் பெறும். எப்படி பூமியிலிருந்து தண்ணீரானது வானத்திற்கு சென்று மேகமாக மாறி அதன் பிறகு மழையாக பொழிகிறதோ அதே போன்று கடல் தண்ணீர் உடலை நனையச் செய்து நமது உடலில் உள்ள சப்த சக்கரங்களையும் பலப்படுத்துகிறது.

வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால் அந்த வீட்டில் துர்வாடை அடிக்கத் தொடங்கும். என்னதான், நறுமணப் பொருட்கள் வீட்டில் பயன்படுத்தினாலும், அந்த துர்வாடையானது அப்படியே தான் இருக்கும். வீட்டிலுள்ள தோஷம் நீங்கினால் தான் துர்வாடை போகும். கடன் தண்ணீர் சிறிதளவு கொண்டு வீட்டை சுத்தம் செய்தால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

கடலில் முங்கி எழுந்திரித்தால் நமது தோஷம் நீங்கும். கடலில் குளிக்கத் தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சமாக வீட்டிற்கு எடுத்து வந்து அதில் சாதாரண தண்ணீரை கலந்து குளிக்கலாம். அப்படியில்லை என்றால் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைபிடி அளவு கல் உப்பு போட்டு கலந்து குளித்தால் உடலில் உள்ள 7 சக்கரங்களும் பலப்படும்.

ஒரு காலத்தில் ஸ்ரீராமர், பார்த்திப லிங்கத்திற்கு கடல் நீர் கொண்டு அபிஷேகம் செய்தார். ஏன், கடல் நீரால் அபிஷேகம் செய்கிறீர்கள் என்று வானர படை வீர்ர்கள் ஸ்ரீ ராமரிடம் கேட்க, அதற்கு, கடல் நீரே விசேஷமானது என்று கூறியிருக்கிறார்.

இனிமேலாவது, கண் திருஷ்டி ஏற்பட்டால், அதற்கு பரிகாரம் என்று எதுவும் தேடாமல், மாத்த்திற்கு ஒரு முறை கடல் நீரில் குளிக்க வேண்டும் அப்படியில்லை என்றால், ஒரு பக்கெட் தண்ணீரில் கல் உப்பு போட்டு கலந்து கரைத்து குளிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். வீட்டையும் சுத்தம் செய்ய, அதான் கழுவி விடும் போது பக்கெட் தண்ணீரில் கல் உப்பு போட்டு கலந்து கரைத்து வீட்டை கழுவலாம். இதன் மூலமாக கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.