கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

73

கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசை தினத்திலும் ஒரு படிகாரக் கல்லை கையில் வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, அவர்களது தலையை மூன்று முறை இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறை, மேலிருந்து கீழ் இப்படியாக மூன்று முறை சுற்றவேண்டும்.

இப்படி திருஷ்டி சுற்றும் போது கண்திருஷ்டி விநாயகரை மனதார நினைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் திருஷ்டி அனைத்தும் ஓடிப் போய் விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். திருஷ்டி சுற்றுவதற்கு முன்பாகவே வீட்டு வாசலில் கொஞ்சமாக கொட்டாங்குச்சியை வைத்து நெருப்பை மூட்டி விடுங்கள். எரிந்து கொண்டிருக்கும் அந்த கொட்டாங்குச்சியில், திருஷ்டி கழித்த உங்கள் கையில் இருக்கும் படிகார கல்லை போட்டு விடுங்கள்.

உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் மேல் திருஷ்டி இருந்தால் அந்த படிகாரங்கள் ஒரு உருவ பொம்மை போல உருகுவதை உங்கள் கண்களாலேயே பார்க்கலாம். இது நிஜமான ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் சோதித்து பாருங்கள். உங்களை பிடித்தது அனைத்தும் அந்த படிகார ரூபத்தில் உருகி கரைந்து போய்விடும்.