கஷ்டங்கள் நீங்கி அமைதி உண்டாக 27 மிளகு பரிகாரம்!

72

கஷ்டங்கள் நீங்கி அமைதி உண்டாக 27 மிளகு பரிகாரம்!

வெற்றிலை சிறந்த மருத்துவ குணம் கொண்ட து. அதனை பூஜைக்கு பயன்படுத்துவதோடு, பரிகாரத்திற்கும் பயன்படுத்தலாம். இவ்வளவு ஏன், வெற்றிலையானது அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்குமே பயன்படுத்தப்படுகிறது. திருமணம் பேசி முடிப்பதற்கும் வெற்றிலை பாக்கு தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட வெற்றிலையை வைத்து 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்…

மேஷம் ராசி:

வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று முருகப் பெருமானுக்கு இரண்டு வெற்றிலை வைத்து அதன் மீது மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின், வெற்றியை மருத்துவ ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போன்று மாம்பழத்தை நீங்களே சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக கஷ்டங்கள் யாவும் நீங்கும். கவலைகள் பறந்தோடும் என்பது ஐதீகம்.

ரிஷபம்:

செவ்வாய்க்கிழமை தோறும் ராகு பகவானுக்கு இரண்டு வெற்றிலையுடன் 9 மிளகு வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டிற்கு வந்ததும், அந்த மிளகு மற்றும் வெற்றிலையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள கஷ்டங்கள் யாவும் தீரும். கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

மிதுனம்:

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று குல தெய்வத்திற்கு இரண்டு வெற்றிலைகள் கொண்டு பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின், அந்த வாழைப்பழத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

கடகம்:

வெள்ளிக்கிழமை தோறும் காளி கோயிலுக்கு சென்று இரண்டு வெற்றிலையுடன் பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் ஒரு மாதுளம் பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின் அந்த மாதுளையை ஜூஸாகவே அல்லது உரித்தோ நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். மனமும் தெளிவடையும்.

சிம்மம்:

ஒவ்வொரு வியாழக் கிழமையும் இஷ்ட தெய்வத்திற்கு இரண்டு வெற்றிலைகள் கொண்டு பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின், அந்த வாழைப்பழத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக தீராத துன்பங்கள் அனைத்தும் தீரும். உங்களது மனது தெளிவடையும்.

கன்னி:

வியாழக்கிழமை அன்று இஷ்ட தெய்வத்தை நினைத்து இரண்டு வெற்றிலை கொண்டு பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் 27 மிளகு வைத்து வழிபட கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். அந்த மிளகை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துலாம்:

வெள்ளிதோறும் குல தெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அப்போது இரண்டு வெற்றிலையுடன் சேர்த்து சிறிதளவு கிராம்பு சேர்த்து வழிபட வேண்டும். கிராம்பு சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்பதால், அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்:

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அம்பிகையை வழிபட வேண்டும். அம்பிகையை வழிபடும் போது இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் சேர்த்து வழிபட வேண்டும். பின்னர், அந்த பேரீச்சம் பழம், வெற்றிலை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக அனைத்து துன்பங்கள் நீங்குவதோடு, வாழ்க்கையை வெறுத்தவர் கூட நிம்மதி பெருமூச்சு அடைவர்.

தனுசு:

வாரந்தோறும் வியாழக்கிமையில் முருகப் பெருமானுக்கு இரண்டு வெற்றிலைகள் கொண்டு பூஜை செய்ய வேண்டும். அப்போது, வெற்றிலையுடன் சிறிது கற்கண்டை வைத்து வழிபட வேண்டும். பின்னர், அந்த கற்கண்டு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நீங்களே பயன்படுத்த கஷ்டங்கள் நீங்கி, வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகரம்:

ஒவ்வொரு சனிக்கிழமையும் காளி கோயிலுக்கு சென்று இரண்டு வெற்றிலை கொண்டு பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் அச்சுவெல்லம் சேர்த்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர், அந்த அச்சுவெல்லத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலமாக உங்களது துன்பங்கள் நீங்கும்.

கும்பம்:

வாரந்தோறும் சனிக்கிழமையன்று காளி கோயிலுக்கு சென்று இரண்டு வெற்றிலை கொண்டு பூஜை செய்ய வேண்டும். வெற்றிலையுடன் நெய் சிறிது சேர்த்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர், வீட்டிற்கு சென்று அந்த நெய்யை நீங்கள் சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கஷ்டங்கள் நீங்குவதோடு, மனதில் உள்ள பாரங்கள் குறையும்.

மீனம்:

ஒவ்வொரு ஞாயிறன்றும் இஷ்ட தெய்வத்தை நினைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அப்போது இரண்டு வெற்றிலையுடன் சேர்த்து சர்க்கரையும் வைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு அந்த சர்க்கரை, வெற்றிலையை நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக சகல பிணிகளும் நீங்கப் பெற்று நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.