குடும்ப பிரச்சனை நீங்க வேப்பிலை மண் விளக்கு பரிகாரம்!

45

குடும்ப பிரச்சனை நீங்க வேப்பிலை மண் விளக்கு பரிகாரம்!

குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தம்பி, அண்ணி, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, நாத்தனார், குழந்தைகள் என்று அனைவரும் இருப்பார்கள். பொதுவாக அந்தக் காலத்தில் அனைவரும் கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்தார்கள். ஆதலால், அந்த காலத்தில் எந்த பிரச்சனையும் குடும்பத்தில் வந்ததில்லை.

ஆனால், இன்றைய காலகட்டங்களில் அண்ணன் தம்பிக்கிடையில் பிரச்சனை, மாமியார் – மருமகள் பிரச்சனை, சொத்து பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரது வீட்டிலும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. பிரச்சனை இல்லாத வீடே இல்லை. இப்படி பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். சரி, இதற்கு என்ன செய்வது, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கம் தான். ஆனால், இந்த பரிகாரம் செய்யும் போது தினமும் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் மஞ்சளால் கோலமிட்டு, அதன் மீது கொஞ்சமாக வேப்பிலை வைக்க வேண்டும். இதையடுத்து, வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு வைத்து, மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இதன் மூலமாக, வீட்டிலிருக்கும் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகள் நீங்கும். மேலும், திருஷ்டியும் கழியும்.

எதிரிகள் ஒரு போதும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள். குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கு, அமைதி நிலவும்.