குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

78

குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் ஏவுகரை அம்மன் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் எலுமிச்சை சாறு பற்றிய புராணக் கதைகள் குறித்து பார்ப்போம். பொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சை பழங்களைத் தான் பிரசாதமாக கொடுப்பார்கள். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு சாற்றப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் எலுமிச்சை சாறு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஏகவுரி அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் எலுமிச்சை சாறை அருந்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.