குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

162

குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

திருநங்கைகளை பார்த்தால் நம்மில் பலரும் கிண்டல் அடித்து சிரிப்போம். ஆனால் திருநங்கைகள் கடவுளுக்கு சமமானவர்களாக கருதப்படுகின்றனர் தெரியுமா? அதாவது கடவுள் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானும், பார்வதியும் இணைந்த ஒரு உருவமாக இருப்பது தான் அர்த்தநாரீஸ்வரர்.

இன்று திருநங்கைகள் ஆக இருப்பவர்கள், அர்த்தநாரீஸ்வரரின் மறு உருவமே என்று நம்பப்படுகிறது. இந்த திருநங்கைகளிடம் நாம் வாங்கும் ஆசீர்வாதம், ஒரு கோடீஸ்வரனாக மாற வேண்டிய அளவு நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படி அவர்களிடம் என்ன தான் இருக்கிறது, அதை நாம் எப்படி பெறுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக திருநங்கைகள் நம்மிடம் வந்து பணம் கேட்பது குறித்து உங்களுக்கு தெரியும். ஆனால் சில வேளைகளில் கோயில்களிலும், போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் இவர்களிடம் நாம் பணத்தை கொடுத்தால் நமக்கு அவர்கள் ஆசீர்வாதத்தை பரிசாக கொடுப்பார்கள். இவர்களிடம் வாங்க கூடிய இந்த ஆசீர்வாதம் அதிர்ஷ்டத்தை தருமாம். இதனால் போகிற காரியம் ஜெயமாக மாறும்.

அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இவர்களிடமிருந்து ஒரு நாணயத்தை நாம் வாங்கி செலவழிக்காமல் பத்திரமாக வைத்துக்கொண்டால் கோடீஸ்வரனாக மாறலாம். அந்த அளவிற்கு நமக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஆனால் அவர்களிடமிருந்து எளிமையாக பணத்தை பெற முடியாது என்பது தான் உண்மை. ஒருவேளை அவர்களிடமிருந்து நீங்கள் வாங்கி விட்டால் அல்லது அவர்களாகவே கொடுத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்.

மேலும் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளை நண்பர்களாக கூட மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய எதிரியின் முழு பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அதை சுருட்டி ஒரு கருப்பு அரைஞான் கயிறு எடுத்து இரண்டாக சிறிது சிறிதாக வெட்டிக் அந்த சிறு கயிறை வைத்து அந்த பேப்பரை கட்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்தையும் சேர்த்து திருநங்கைகளுக்கு கொடுத்தால் போதும். அதனை அவர்கள் வாங்கினால் கொஞ்ச நாளிலேயே எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் உங்களுக்கு நண்பர்களாக மாறி விடுவார்கள். அது போல் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற குழந்தை பொம்மை ஒன்றை வாங்கி திருநங்கைகளிடம் கொடுங்கள்.

அப்படி கொடுத்தால் உங்களிடமிருந்து அவர்கள் வாங்க மாட்டார்கள். ஆகவே பொம்மையுடன் பணத்தையும் சேர்த்து கொடுத்து விடுங்கள். அப்படி அவர்கள் பொம்மையை வாங்கினால் விரைவாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.