கெட்ட சக்திகள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

180

கெட்ட சக்திகள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கூலுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை, வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அம்மனின் வாக்கு. பெரும்பாலான அம்மன் கோயில்களில் வேப்பிலை தான் பிரசாதமாக கொடுக்கப்படும். வேப்பிலை என்பது அம்மனுக்குரிய மரம். வேப்ப மரத்தை சக்தியின் ரூபமாகவே பலரும் வழிபாடு செய்வார்கள். வேப்பிலையின் கசப்புத் தன்மை நமது உடலில் உள்ள நோய்களை மட்டுமல்லாமல், துஷ்ட சக்திகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும், நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டியடிக்கும்.

தாந்திரீக பரிகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றிற்கும், ஆன்மீக ரீதியிலான பரிகாரங்களுக்கும் எலுமிச்சை பயன்படுகிறது. நல்ல சக்திகளையும், கெட்ட சக்திகளையும் உள்வாக்கிக் கொள்ளும் திறனை எலுமிச்சை கொண்டுள்ளது. அதே போன்று தான் மனித உடலும், நல்ல மற்றும் கெட்ட சக்திகளையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது.

மனித உடலானது கெட்ட சக்திகளை கிரகித்துக் கொண்டால் எதிர்மறை ஆற்றல் ஆதிக்கம் செலுத்த துவங்கும். இதன் காரணமாக நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை அறியாமல் தீயது செய்ய தூண்டுகின்றன. ஆணவம், அகங்காரம், கோபம், பகை ஆகியவற்றை ஏற்படுத்தும் எதிர்மறை சக்திகளை நமது உடலிலிருந்து நீக்குவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். அமாவாசை அன்று குளிக்கும் தண்ணீரில் ஒரு கொத்து வேப்பிலை, சுத்தமான இழைக்கப்பட்ட மஞ்சள் கொஞ்சம், ஒரு ஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து குளித்து வந்தால் போதும். எத்தகைய கெட்ட சக்தியாக இருந்தாலும், உடலை விட்டு எளிதாக நீங்கிவிடும்.

இதையடுத்து, உங்களுக்கு எந்தவிதமான தோஷங்களும் அண்டாது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த பரிகாரங்களை வேப்பிலை கொண்டு செய்து வந்தால் நல்லதே நடக்கும்.