சங்கடங்கள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

149

சங்கடங்கள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

வீட்டு நிலை வாசலில் அருகம்புல்லை இப்படி வைத்தால் உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டதும் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும். மனித ரூபத்தில் இருக்கும் கெடுதல் கூட வீட்டிற்குள் நுழையாது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் வரை எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து ஆக வேண்டி இருக்கின்றது. அதாவது நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய சில கெட்ட சக்திகளால் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் பிரச்சனை ஏற்படும்.

உதாரணத்திற்கு சில மனிதர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றாலே அது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அது நமக்கே நன்றாக தெரியும். நம்முடைய வீட்டிற்கு அவர்களை வர வேண்டாம் என்று நம்மால் சொல்லவும் முடியாது. ரொம்பவும் நெருங்கிய சொந்தங்கள் ஆக, நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வந்தால் நம் வீட்டில் கட்டாயம் ஒரு பிரச்சனை நடப்பது உறுதி.

இன்னும் சில பேர் வீடுகளில் சில பேர் வந்து ஏதாவது ஒரு பொருளை வீட்டிலிருந்து நமக்கே தெரியாமல் திருடி கொண்டு சென்றுவிடுவார்கள் சின்ன சின்ன பொருட்கள் திருடும் பழக்கம் அவர்களிடம் இருக்கும். அது நமக்கும் தெரியும். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கும்.

அடுத்தபடியாக கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டி கெட்ட சக்திகளின் ஆதிக்கம் ஏதாவது ஒரு ரூபத்தில் நிலை வாசலுக்குள் நுழையவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் நாம் எப்படி தடுப்பது என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

விநாயகரது கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலையை வாங்கி அணிவிக்க வேண்டும். உங்களது குடும்பத்தில் உள்ளவர்களுடைய பெயரை சொல்லி அர்ச்சனை செய்து உங்கள் வீட்டில் இருக்கும். சங்கடங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

விநாயகர் சன்னிதியை மூன்று முறை வலம் வாருங்கள். விநாயகர் கோயிலில் இருந்து விநாயகருக்கு போட்ட வேறு ஏதாவது அருகம்புல் மாலையிலிருந்தோ அல்லது நீங்கள் போட்ட அருகம்புல் மாலையிலிருந்தோ ஒரு கைப்பிடியளவு அருகம் புல்லை வீட்டுக்கு வாங்கி வாருங்கள்.

இந்த அருகம்புல்லை ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி உங்களுடைய நில வாசப்படியில் தொங்கவிட வேண்டும் அருகம்புல் காய்ந்தாலும் பரவாயில்லை ஒரு மாதத்திற்கு ஒரு முறை அந்த அருகம்புல்லை மாற்றி விட்டு மீண்டும் புதியதாக கட்டிக் கொள்ளுங்கள். இப்படி நிலைப்படியில் விநாயகரது அருகம்புல் இருந்தால் உங்கள் வீட்டிற்கு வரும் கெட்ட எண்ணம் பிடித்த மனிதர்கள் கூட வீட்டிற்குள் நுழைய முடியாது. ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் அவர்களை உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து விடுவார்.

கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் கெட்ட சக்தி கண்திருஷ்டி இவைகளும் உங்கள் நிலை வாசப்படிகுள் நிச்சயம் நுழையாது. உங்களுடைய வீட்டில் இப்படி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் அருகம்புல்லை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும். விநாயகரின் திருவுருவப் படத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அந்த அருகம்புல்லை எடுத்து கூட நிலை வாசலில் கட்டலாம். நம்பிக்கையான பக்தி ஒன்று மட்டுமே இந்த இடத்தில் மூலதனமாக இருக்க வேண்டும் முயற்சி செய்து பாருங்கள்.