சனிபகவானுக்கு இருக்க வேண்டிய விரதங்கள்!

176

சனிபகவானுக்கு இருக்க வேண்டிய விரதங்கள்!

தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் நீதிமானாக இருப்பவர் சனி பகவான் தான். நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டுமே. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகம் பிடித்தால் தினம், மாதம், வருடம் என்று அதனுடைய பாதிப்பும், பலன்களும் இருக்கும்.

சந்திரன் ஒரு தினக்கோள் என்பதால், இது ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் மட்டுமே இருக்கும். ஆகையால், இதனால், ஏற்படும் பாதிப்பும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்.

சூரியன், புதன் மற்றும் புதன் ஆகியவை மாத கிரகங்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு தாமும் ஒவ்வொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால், இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு மாதம் வரையில் நீடிக்கும்.

செவ்வாய் பகவானும் மாதம் கிரகம் தான். ஆனால், அது 45 முதல் 60 நாட்கள் வரையில் ஒரு ராசியில் இருக்கும். அதனால், செவ்வாய் பகவானால் ஏற்படும் மாற்றங்களும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருக்கும்.

குரு, சனி மற்றும் ராகு – கேது ஆகியவை வருட கிரகங்கள். இந்த கிரகங்களின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் இந்த கிரகங்களினால் ஏற்படும் பலன்களும் மாதக்கணக்கில் ஒரு ஜாதகரை பாதிக்கும். சனி பகவான் மட்டும் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார். ராகு – கேது மற்றும் சனி பகவானுக்கு ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்றால், முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினை என்ன என்பதை கேது சுட்டிக் காட்டுவார். அவர் செய்த கர்மாவிற்கு என்ன பலன் என்பதை ராகு சுட்டிக் காட்டுவார்.

ராகு – கேதுக்களின் உதவியால், ஒருவர் செய்த கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை சனி பகவான் கொடுப்பார். கிரகப் பெயர்ச்சியிலேயே சனி பகவானுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சனி பகவானை நீதிமான், நீதிபதி என்றும் அழைப்பர். யாரேனும் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் தயங்க மாட்டார். தான் யார் என்பதை ஒவ்வொருவருக்கும் சனி பகவான் புரிய வைப்பார். வைரம் எப்படி பட்டை தீட்ட தீட்ட மின்னுகிறதோ, அதற்கேற்ப சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து அவரை சனி பகவான் நல்வழிப்படுத்துவார்.

நவக்கிரகங்களில் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். சனிதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தினை பின்பற்றினால் தோஷத்தின் தாக்கம் குறையும்.

சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.

சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.

சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.

சனிக்கிழமைகளில் சனிபகவான் கோயிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.

சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாற்றி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்கலாம்.

சனிபகவானுக்கு நவகிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.

அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளை தரும்.

தினசரி நவகிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.

நவக்கிரக சனி பகவான் மந்திரம்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சனீஸ்வர தேவே

இச்செகம் வாழ இன்னருள் தா!

சனி தோஷம் நீக்கும் வழிபாடு:

சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும், எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.

ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.

தினமும் காகத்திற்கு சாதம் வையுங்கள். சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு உண்ணுங்கள்.

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.