சனி தோஷம் நீங்க, தீர்ப்பு சாதகமாக வர எளிய பரிகாரம்!

82

சனி தோஷம் நீங்க, நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வர எளிய பரிகாரம்!

சனி தோஷம் நீங்க, தீர்ப்பு சாதகமாக வர எளிய பரிகாரம்!

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் மனக்கஷ்டங்கள், மனதில் சஞ்சலங்கள் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் தீர கோயில்களுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம், பிரார்த்தனை செய்வோம். எனினும், இது போன்ற மனக்கஷ்டங்கள், மனதில் பாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு சித்தர்கள் எளிய பரிகாரங்களை கூறியுள்ளனர். அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

 1. பிரதோஷத்தன்று ரிஷபா ரூட மூர்த்தியாய் காட்சி தரும் சிவபெருமானை, மகேசனை தேவியுடன் வழிபட 1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.
 2. நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக வர, சிவன் கோயிலில் இருக்கும் வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை 21 முறை சுற்றி வந்து குறைகளை கூறி வந்தால் நன்மை உண்டாகும். இந்த மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 3. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நெய் விளக்கு ஏற்றி வழிபட 3 மாதத்தில் வேலை கிடைக்கும்.
 4. கடன் பிரச்சனைகள் தீர ரோகிணி நட்சத்திரத்தன்று இரட்டை பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட நன்மை உண்டாகும்.
 5. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து இரு தேங்காய் மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும்.
 6. வாரந்தோறும் செவ்வாயன்று நெய் தீபம் ஏற்றி சக்கரத்தாழ்வாரை வழிபட கொடுத்த கடன் திரும்ப வரும். இது போன்று 21 செவ்வாய்கிழமை செய்ய வேண்டும்.
 7. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திர நாளில் முருகப் பெருமானுக்கு வேலில் எலுமிச்சம் பழம் சொருகி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 8. ஒவ்வொரு வாரமும் வெள்ளி தோறும் நவக்கிரக சுக்கிர பகவானுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட கணவன் – மனைவிக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
 9. கொடுத்த கடன் வசூலாக பைரவர் சன்னதியில் 8 வாரம் செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சஹசர நாம அர்ச்சனை செய்தால், கடன் வசூலாகும்.
 10. வறுமையும், தீராத நோய்களும் தீர, ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்க்க வேண்டும்.
 11. சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்க, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
 12. கடன் பிரச்சனைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், கொடிய தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும் வழிபடுவது நல்லது.
 13. எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் சுந்தரகாண்டத்தில் ஒரு அத்தியாத்தை தினந்தோறும் ஒன்று சொல்லி வர மிக மிக நன்மை தரும்.
 14. புத்திர பாக்கியம் உண்டாக கால பைரவருக்கு 6 தேய்பிறை அஷ்டமிகளில் சஹசர நாம அர்ச்சனை செய்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.
 15. ஸ்ரீ நரசிம்மரின் எந்த கோலத்தை வேண்டுமானாலும் தரிசித்தாலும் கடன் பிரச்சனைகள், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, ஏவல், செய்வினைகள், திருமணத் தடை என்று அனைத்தும் விலகி நன்மை உண்டாகும்.
 16. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் கை படாத இடத்தில் வைத்து பூஜை செய்து வந்தால், பூதகண சேஷ்டைகள் இருந்தாலும் நீங்கி விடும்.
 17. சனிபகவானால் ஏற்பட்ட பாதிப்பு குறைய ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
 18. கோயில்களில் இருக்கும் திரிசூலங்களில் குங்குமமிட்டு, எலுமிச்சம் பழம் குத்தி வழிபட திருஷ்டி, செய்வினை பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
 19. விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும், சிவன் கோயிலில் காவல் தெய்வமான கால பைரவரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
 20. குடும்பத்தில் ஏதேனும் தாங்க முடியாத கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.
 21. 192 நாட்களில் கருத்தரிப்பு உண்டாக வாரந்தோறும் வரும் வியாழக்கிழமைகளில் ஏதாவது ஒரு நேரம் மட்டும் விரதம் இருந்து தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும்.
 22. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நாம் வேண்டியது நடக்கும்.
 23. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு எருக்கம் திரி கொண்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.