சனி, ராகு, கேது தோஷம் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு!

40

சனி, ராகு, கேது தோஷம் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு!

கிரக நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அவர்களது ஜாத ரீதியிலான கட்டங்களின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கிறது. மேலும், பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஜாதகக்காரர்களுக்கு இன்ப, துன்பங்கள் வந்து சேருகிறது. ஒருவரது ஜாதகத்தில் ஏழரை ஆண்டுகள் இருந்து அந்த ஜாதகக்காரரை நல் வழிப்படுத்துவதில் முக்கியத்தும் வாய்ந்தவர் சனி பகவான்.

ஆனால், இவரது பார்வையில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு என்பதை இவர் புரிய வைப்பார். அந்தளவிற்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுப்பார். இது போன்று சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

துளசி தாசரின் அனுமன் சாலிசா, ஆஞ்சநேயர் கீர்த்தனங்கள், ஆதிசங்கரரின் பஞ்சரத்தினம், ஆஞ்சநேய கவசம் மற்றும் அஷ்டோத்திர சதநாமாவளி ஆகியற்றை படித்து, சொல்லி வந்தால் ஆஞ்சநேயரின் துணை எப்போதும் கிடைக்கும். உடல் மற்றும் மன வலிமை கிடைக்கப் பெறலாம்.

தனது பலத்தால் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார். ஆகவே ஆஞ்சநேயரை வழிபட்டு வர அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, ராகு கேது பெயர்ச்சி, செவ்வாய் தோஷம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.