சாப்பாட்டை பழித்த தோஷம் நீங்க அன்னக்காவடி விநாயகர் வழிபாடு!

123

சாப்பாட்டை பழித்த தோஷம் நீங்க அன்னக்காவடி விநாயகர் வழிபாடு!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள கோயில் தான் அன்னக்காவடி விநாயகர் கோயில். ஒரு காலத்தில் அன்னத்தால் சிவலிங்கம் மற்றும் விநாயகரை பூஜித்து வருகின்ற ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்த ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட கோயில் தான் இந்த அன்னக்காவடி விநாயகர் கோயில். முன்னொரு காலத்தில் இந்த கோயிலானது ஆலயம் தாவடி விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

இந்த அன்னக்காவடி விநாயகரை வழிபடுவதன் மூலமாக, உணவினை பழித்த தோஷமும் நீங்கும். பசியால் ஒருவர் அன்னத்தை வேண்டும் போது அதனை கொடுக்காமல் உண்ட தோஷமும் நீங்கும். முன்னோர்களான பித்ருக்களுக்கு உணவளிக்காத தோஷமும் நீங்கும்.