சுக்கிரன் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

71

சுக்கிரன் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி ஜாதகத்தில் கட்ட என்ன சொல்கிறதோ அதன்படி தான் அவர்களுக்கு பலன்கள் நடக்கும். ஒவ்வொருவருக்கும் ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, நாக தோஷம், செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற நவக்கிரகங்களாலும் தோஷங்கள் ஏற்படும்.

இந்த தோஷங்கள் நீங்க அதற்குரிய பரிகாரங்களை செய்து வழிபடுவது சிறப்பு. அதன்படி, இந்தப் பதிவில் நாம், சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து காண்போம்.

சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால், சுக்கிர திசை மற்றும் புதிதி காலங்களில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று விரதமிருந்து, வெண்தாமரை மலர் மற்றும் நெய் சாதம் தயார் செய்து மகாலட்சுமி தேவிக்கு நைவேத்தியம் செய்து, சுக்கிர காயத்ரியை 24 முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் சுக்கிர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.