சுக்ர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

80

சுக்ர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

“எறும்பானது ரவையில் இருந்து சர்க்கரையை பிரித்து உண்ண உண்ண உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு குறைவதை கண்கூடாக பார்க்கலாம்” அருள்மிகு செளந்தரநாயகி உடனுறை வெண்ணிக்கரும்பேஸ்வரா், கோயில் வெண்ணி, நீடாமங்கலம் வட்டம். திருவாரூர் மாவட்டம்.

மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்று சேர்த்து வைத்தாற்போல் அருள்பாலிக் கிறார். அதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் செளந்தர_நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது.

திருமணமாகி கர்ப்பமாக (தலைப்பிரசவம்) இருக்கும் பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு முடிந்ததும், கொஞ்சம் வளையல்களை எடுத்து வந்து அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டி விட்டு, தமக்கு பிரசவம் எளிதாக நடக்க பிராத்திக்க கண்டிப்பாக சுக பிரசவமாகும் என்பது உண்மை.

நோய்களை விரட்டும் சூரிய மற்றும் சந்திர புஷ்கரணி அமைய பெற்றது. பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர்.

அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு முனிவர் சிறிதும் யோசிக்காமல் வெண்ணி கரும்பேஸ்வரர் என்று அழைக்கலாம் என்றார்.

வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து, சர்க்கரையும் (சீனி), ரவையும் சம அளவு எடுத்து கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர வேண்டும்.

எறும்பு ரவையில் இருந்து சர்க்கரையை பிரித்து உண்ண உண்ண உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு குறைவதை கண்கூடாக பார்க்கலாம், சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயும் நீங்கி விடும்.

பிறகு கோயிலை வலம் வந்து, வெண்ணி கரும்பேசுவரருக்கும் அழகிய நாயகி அம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சுக்ர தோஷம் உள்ளவர்களுக்கும் லிங்கோத்பவர் சன்னதியில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றி சிறப்பு பரிகார பூஜைகள் செய்யபடுகின்றது.

தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற கரிகால சோழன் வணங்கிய “பிடாரி_அம்மன்”  இங்கு வீற்றுருக்கின்றாள். இந்த அம்பாளை சூடம் ஏற்றி எலும்பிச்சை மாலை அணிவித்து வணங்க உங்கள் எதிரிகள் ஒடுக்கபடுவதுதிண்ணம். வெட்ட வெளியில் மரத்தின் அடியில் மேல் கூரை இல்லாமல் இந்த அம்பாள் இருக்கின்றாள்.

மேல் கூரை அமைக்க பல முறை முயன்று பல தடங்கல்கள் ஏற்பட்டதால் முயற்சியை கிராம மக்கள் கைவிட்டு விட்டனர். வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று அழைக்கப்பட்ட ஊர், இன்று கோயில் வெண்ணி என்று மருவி விட்டது.

கோயிலுக்கு அருகில் கடைகள் இல்லை. எனவே விளக்கு, நெய், அர்ச்சனை பொருட்கள், வஸ்திரம், பூமாலை, சர்க்கரை, ரவை என தேவை படும் அனைத்தையும் தாங்களே முன்னதாக வாங்கி செல்வது நல்லது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் அம்மாபேட்டை அடுத்து உள்ளது கோயில் வெண்ணி திருத்தலம்.