சுமங்கலி பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

163

சுமங்கலி பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

விருதுநகர் மாவட்டம் கோல்வார்பட்டி என்ற ஊரில் உள்ள கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் சுந்தரேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மீனாட்சி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சித்திரை திருவிழா, அன்னாபிஷேகம், சிவராத்திரி, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

கோயிலில் சுவாமிக்கு நேர் எதிராக இருக்க வேண்டிய நந்தி பகவான் சற்று விலகியிருக்கிறது. முருகனின் மயில் வாகனம், பைரவரின் நாய் வாகனம் ஆகியவற்றின் தலைப்பகுதி சுவாமிக்கு வலதுபுறம் இருப்பது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில் இடது புறமாக திரும்பியுள்ளது சிறப்பு. இங்கு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பைரவர், கருப்பண்ணசாமி, கலங்காத கண்டப்ப நாயக்கர், துவாரபாலகர், தூணில் ராமர், அனுமர் சிற்பம் ஆகியவை உள்ளன.

இங்குள்ள மீனாட்சி அம்மனை 11 வாரங்கள் வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் குத்துவிளக்கு பூஜை செய்தல், பிரதோஷ காலத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட புத்திசாலித்தனமும், தைரியமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.

நாகதோஷம் நீங்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். சங்கடஹரசதுர்த்தி நாட்களில் இங்குள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்தால் நாகதோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. கலைநுணுக்கம் மிக்க இந்தக் கோயிலில் காணப்படுகிறது. குறிப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராமர், சீதை, அனுமன் சிலை உள்ளது. நின்ற கோலத்தில் கிழக்கு பார்த்தவாறு மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கையில் கிளி இல்லாமல் தாமரை மலருடன் காட்சி தரும் மீனாட்சி அம்மனை 11 வாரங்கள் வணங்கி வழிபட்டு கடைசி வாரம் ஹோமம் செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பௌர்ணமியன்று விளக்கு பூஜை செய்தல், பிரதோஷ காலத்தில் நெய்விளக்கு ஏற்றுவதால் புத்திசாலித்தனமும், தைரியமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. ராகு கேதுவுடன் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் நாக தோஷத்தை விலக்கும் சக்தி படைத்தவராக அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எட்டயபுரத்தில் கலங்காத கண்டப்ப நாயக்கர் ஆட்சி செய்து வந்தார். தோஷங்கள் காரணமாக அவரது ஆட்சியின் போது நடந்த போர்களில் தோல்வியடைந்தார். தோஷ நிவர்த்திக்காக பல்வேறு கோயில்களுக்குச் சென்றார். ஒரு சமயம் சுவாமியின் வலப்புறம் ஆற்றலுடன் அருள் பாலிக்கும் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன் வலப்புறம் அம்பாளுடன் கூடிய சிவன் கோயிலும் கட்டினால் தோஷம் நீங்கும் என்று அசரீரி ஒலித்தது.

அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார். ஜமீன் எல்லைக்குட்பட்ட சாத்தூர் அருகிலுள்ள கோல்வார்பட்டியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமைப்பில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கட்டினார். நூறு கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தார். இந்த ஊரைச் சுற்றியுள்ள 18 பட்டிக்கும் குல தெய்வமாக மீனாட்சி அம்பாள் விளங்குகிறாள். வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தக் கோயிலை பராமரித்து வந்துள்ளார்.