சூரியனால் ஏற்பட்ட தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

64

சூரியனால் ஏற்பட்ட தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி ஜாதகத்தில் கட்ட என்ன சொல்கிறதோ அதன்படி தான் அவர்களுக்கு பலன்கள் நடக்கும். ஒவ்வொருவருக்கும் ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, நாக தோஷம், செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற நவக்கிரகங்களாலும் தோஷங்கள் ஏற்படும்.

இந்த தோஷங்கள் நீங்க அதற்குரிய பரிகாரங்களை செய்து வழிபடுவது சிறப்பு. அதன்படி, இந்தப் பதிவில் நாம், சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து காண்போம்.

சூரியனை பிதுர்காரகன் என்பர். ஜாதகத்தில் சூரியன் சாதகமற்ற நிலையில் இருந்தால் தந்தை – மகன் உறவில் பிரச்சனையை ஏற்படுத்துவார். எதிலும் ஆட்சி, அதிகாரத்துடன் இருக்க வைப்பதில் சூரிய பகவான் வல்லவர். அரசு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சூரியனின் பார்வையானது நல்ல பலன்களை ஏற்படுத்தும். அப்படியில்லை என்றால் பாதகத்தை ஏற்படுத்தும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கும் சூரியன் சிறப்பாக இல்லையென்றால், பூர்வீக சொத்து பிரச்சனை, வில்லங்கங்கள் ஏற்படும். மேலும், தலை, கண்கள், வயிறு, ரத்தத்தில் பிரச்சனை என்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அரசு தொடர்பான அனுகூலங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சட்டப் பூர்வமாக நடப்பவர்களினால் பிரச்சனை ஏற்படலாம். ஒரு சிலருக்கு திருமண தடை ஏற்படும். இவை அனைத்தும் ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பாதகமான இட த்தில் அமைவதால் ஏற்படுகிறது. இதுவே சூரிய தோஷம் எனப்படுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புத்தி காலகட்ட த்தில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் விரதம் இருந்து வீட்டு பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவ படத்திற்கு செந்தாமரை மலர்கள் கொண்டு மாலை அணிவித்து கோதுமையினால் இனிப்பு, நைவேத்தியம் படைத்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வந்தால் தோஷம் நீங்கும்.