செய்த பாவங்களை தீர்க்க உதவும் பரிகாரம்!

161

செய்த பாவங்களை தீர்க்க உதவும் பரிகாரம்!

பாவங்கள் செய்யாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூட சில நல்ல மனிதர்களை கூட பாவங்கள் செய்ய வைத்துவிடுகிறது.

சற்று வசதிகள் வந்தவுடன் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய உள் மனது துடிக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கும் மனவளம் குன்றியவர்களையும் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும் என சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.