செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பிரதானம். பணம் இல்லாமல் யாராலும், எதையும் செய்ய முடியாது. பணம் இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணம் இல்லாமல் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்றும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரையில் பணம் உங்களிடம் சேராமல் இருந்து இனிமேல் அந்த பணம் உங்களிடம் அதிகம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காசு, பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு நமது வீட்டில் இருக்கும் பீரோ சரியான திசையில் அமைய வேண்டும். பொதுவாக ஒருவருடைய வீட்டில் செல்வம் அதிகம் நிலைக்காமல் இருந்தால் அவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்க கூடிய ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று அர்த்தம்.
இப்படி நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை உண்டாக்கக்கூடிய விஷயங்களை சிறுதளவு மாற்றி அமைத்தாலே நம்முடைய வீட்டில் செல்வம் பெருக தொடங்கும். நாம் சம்பாதிக்கும் பணம், நகைகளை எல்லாம் வீட்டிலுள்ள பீரோவில் வைப்போம். அப்படி பீரோவில் வைக்கும் போது அதன் மேற்பகுதியில் தேவையில்லாத பொருட்களை போட்டு வைத்திருப்போம்.
அதுபோல பீரோவை நல்ல அழகாக சுத்தமாக வைக்காமல் இருப்போம். இப்படி இருப்பது எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். கஷ்டம் ஒருநாளும் உங்களை விட்டு போகாது என சொல்கிறார்கள். காரணம் நாம் சேர்த்த செல்வத்தை அதிகம் கொண்டு வைப்பது இந்த இடத்தில் தான். இந்த செல்வம் இருக்கக்கூடிய இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உங்களுடைய பீரோவின் மேல் தேவையில்லாத ஏதாவது பொருட்களை நீங்கள் வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்றி அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் பீரோவிற்கு உள்ளும், வெளியேயும் சுத்தமாக, அழகாக இருக்க வேண்டும். ஒரு சிலர் வீட்டில் உள்ள பீரோவில் போட்டோ ஆல்பத்தை வைத்திருப்பார்கள். இந்த போட்டோ ஆல்பத்தில் இறந்த உங்களுடைய முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதை அகற்றுவது நல்லது.
பீரோவில் நகை, பணம் வைக்கும் போது மரத்தாலான பெட்டகத்தில் வைப்பது நல்லது. அதை தவிர்த்து துணியில் நீங்கள் பொதிந்து வைக்கலாம். பிளாஸ்டிக்கில் பணம் மற்றும் நகைகளை வைப்பது நல்லதல்ல. இது உங்களுக்கு செல்வம் அதிகம் வருவதை குறைக்க தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதுபோல நகைகளை நீங்கள் வைக்கும் பொழுது சிகப்பு துணியில் பொதிந்து வைப்பது சிறந்தது.
மரத்தாலான பெட்டகத்தில் வைக்கும் பொழுது சிகப்பு துணியில் பொதிந்து வைக்கலாம். இல்லையென்றால் சிகப்பு துணியில் பொதிந்து தனியாகவும் வைக்கலாம். அதுபோல பீரோவில் நீங்கள் பணம் மற்றும் நகைகளை வைக்கும் பொழுது தனித் தனியாக வைக்க வேண்டும். பணம் இருக்கக்கூடிய பெட்டியில் நகை சேர்த்து வைக்கக் கூடாது. நகை இருக்கக்கூடிய பெட்டியில் பணம் இந்த இரண்டையும் சேர்த்து வைக்கக் கூடாது.
அது போல வெள்ளியிலான பொருட்களை வைக்கும் பொழுதும் தங்கத்திலான பொருளை தனியாகவும், பணத்தை தனியாகவும், வெள்ளியில் செய்த பொருட்களை தனியாகவும் இப்படி தனித்தனியாக வைப்பது சிறந்தது. பணம் மற்றும் தங்க நகைகளை வைக்கக்கூடிய உங்களுடைய பீரோ உங்களுடைய வீட்டில் சரியான திசையில் இருக்க வேண்டும். இது சரியான திசையில் இருக்கும் பொழுது மட்டுமே உங்களுக்கு செல்வம் அதிகம் வந்து சேரும்.
பீரோவை வீட்டில் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். இதுவே சிறந்தது. இந்த இடத்தில் வைக்கும் பொழுது இது அதிக நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து உங்களுடைய பணம், செல்வத்தை அதிக அளவு உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். இந்த திசையில் வைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் வைக்கலாம். அதுபோல உங்களுடைய வீட்டில் பீரோவை வைக்கும்போது சுவரோடு சேர்த்து வைக்கக் கூடாது.
சுவரிலிருந்து அரை அடி இடைவெளி விட்டு வைக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் சுவரோடு நீங்கள் சேர்த்து வைக்கும் பொழுது அதன் அடியில் இருக்கக்கூடிய தூசுக்கள், அழுக்குகளை நம்மால் சரியாக சுத்தம் செய்து எடுக்க முடியாது. பீரோ இருக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்காக அரை அடி தள்ளி வைக்கும் பொழுது அந்த இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க முடியும்.
பீரோவில் வைத்திருக்கக்கூடிய நகை மற்றும் பணம் பெட்டகங்கள் தெற்கு திசையை தவிர்த்து மற்ற எந்த திசையை பார்த்தும் நீங்கள் வைக்கலாம். இந்தப் பெட்டகங்கள் வடக்கு திசை பார்த்து இருப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால் குபேரனுக்குரிய திசை வடக்கு திசை. இப்படி வடக்கு திசை பார்த்து நம்முடைய பணப்பெட்டியை வைக்கும் பொழுது அது மேலும் செல்வத்தை அதிக அளவு நம்மிடம் கொண்டு சேர்க்கும்.
ஒரு சிலருடைய வீட்டில் வைத்திருக்கக்கூடிய பீரோவில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். அப்படி உங்களுடைய பீரோவில் கண்ணாடி இருந்தால் அந்த கண்ணாடியில் படுக்கை தெரியாத வகையில் வைக்க வேண்டும். உங்களுடைய பணம் மற்றும் நகைகளை உங்கள் பீரோவில் வைக்கும்போது இந்த விஷயங்களை நீங்கள் கவனமாக பார்த்து வைத்தால் உங்களுடைய வீட்டில் செல்வம் மென்மேலும் அதிகரித்து, கடன் பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும்.