செவ்வாய் தோஷம் நீக்கும் காளியம்மன்!

104

செவ்வாய் தோஷம் நீக்கும் காளியம்மன்!

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகிலுள்ள தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தட்டாங்குளம் காளியம்மன் கோயில். இந்த காளியம்மன் செவ்வாடைக்காரி என்றும் அழைக்கப்படுகிறாள். ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் தடை ஏற்படும். இதனை நாகதோஷம் என்று கூறுவர்.

செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகிசாசுரனை தேவி வதைத்த இடம் என்பதால், இந்த இட த்திற்கு தேவிபட்டணம் என்று பெயர் வந்தது.