செவ்வாய் தோஷம் பரிகாரம் எப்போது செய்ய வேண்டும்?

49

செவ்வாய் தோஷம் பரிகாரம் எப்போது செய்ய வேண்டும்?

செவ்வாய் தோஷம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணத் தடை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக ஆற்றங்கரை, குளக்கரை, நதிக்கரை, விஷ்ணு சன்னதி, குரு கோயில், சிவன் கோயில் ஆகிய இடங்களில் தான் பரிகாரம் செய்வார்கள்.

அதுவும், நேரம், காலம் பார்த்து தான் பரிகாரங்கள் செய்து கொள்வார்கள். அந்த வகையில், செவ்வாய் தோஷம் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் செய்ய தகுந்த நேரம் காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் அதற்கான முழு பலனும் கிடைக்கப் பெறும்.

சுபமான பரிகாரங்களை வளர்பிறை நாட்களிலும், அசுப பரிகாரங்களை தேய்பிறை நாட்களிலும் செய்ய வேண்டும். ஆற்றங்கரை, குளக்கரை, நதிக்கரை, விஷ்ணு சன்னதி, குரு கோயில், சிவன் கோயில் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். மேலும், செவ்வாய் இருக்கும் இட த்தின் அதிபதி என்ன கிழமையை குறிக்கிறதோ அந்த கிழமையில் தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதோடு, அவரவர் பிறந்த நட்சத்திர நாளிலும் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

செவ்வாய் கிழமையும் செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்வதற்கு ஏற்ற நாள். ஜென்ம நட்சத்திரத்திற்கு 4, 8, 12 ஆகிய நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக் கூடாது. யார் பரிகாரம் செய்கிறாரோ அவரது மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆகிய நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது.

இவர்களுக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.