செவ்வாய் தோஷம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிய பரிகாரம்!

104

செவ்வாய் தோஷம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிய பரிகாரம்!

பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதனை செவ்வாய் தோஷம் என்கிறோம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகக்காரரை தான் மணமுடித்து வைக்க வேண்டும். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

 1. வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
 2. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, துவரம் பருப்பை மட்டுமே உண்ண வேண்டும்.
 3. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்ட ஆண், பெண் ஜாதகக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் எந்த பாதிப்பும் வராது.
 4. முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
 5. வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.
 6. செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்களது வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ளலாம்.
 7. பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
 8. ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் பூஜை செய்வதோடு, ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
 9. செவ்வாய் தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதன் பிறகு திருமணம் செய்தால், செவ்வாய் தோஷம் பாதிப்பு குறையும்.
 10. செவ்வாய்கிழமைகளில் நவக்கிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்திற்கு நல்ல பலனாக அமையும்.
 11. செவ்வாய் தோஷ தாக்கம் குறைய கும்ப விவாகம் என்ற திருமணம் செய்ய வேண்டும். இந்த வகை திருமணத்தின் போது தோஷம் உள்ளவர்கள் மரத்திற்கு தாலி கட்ட வேண்டும். அப்படியில்லை என்றால் தாழியை திருமணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் செவ்வாய் தோஷம் ஒன்றுமில்லாமல் போகும்.