தங்க நகை சேர பணக்காரர்கள் செய்யும் பரிகாரம்!

133

தங்க நகை சேர பணக்காரர்கள் செய்யும் பரிகாரம்!

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகளும், நடுத்தர மக்களும் அதே நிலைமையில்தான் இருக்கின்றார்கள். என்ன செய்வது. இதுதான் தலையெழுத்து என்று விட்டுவிட முடியுமா? ஏதாவது ஒரு வழியை பின்பற்றி பணத்தையும் நகையையும் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். சில பணக்காரர்கள், செய்யும் பரிகாரங்களை அவ்வளவு சுலபமாக வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். வெளியில் சொன்னால் பரிகாரத்திற்கு பலன் போய்விடும் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆனால் பரிகாரத்தை வெளியில் கூறுவதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. இந்தப் பரிகாரத்தை செய்தால் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை நான் பிரயோகப்படுத்திய பின்புதான், எனக்கு இந்த பலன் கிடைத்தது என்று மட்டும் யாரிடமும் கூறி விடக்கூடாது. ஏனென்றால் ஒரு சிலருக்கு, ஒரு சில பரிகாரங்கள் மட்டுமே பலன் அளிக்கும். நமக்கு எந்த பரிகாரம் கை கொடுக்கின்றது என்பதை முடிவு செய்து விட்டு, பின்பு அதை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் ஒரே வகையான பிரச்சினைகளுக்கு, பல வகையான பரிகாரங்கள் கூறப்படுகின்றன. அதில் எது சரி என்று நமக்குத்தானே தெரியும். அப்படி நீங்கள் அதை தெரிந்து கொண்டால் அந்த ரகசிய சூட்சமத்தை அடுத்தவரிடம் கூறி விடாதீர்கள்.

இப்படியாக வட மாநிலத்தவர்கள், பெரிய பெரிய பணக்காரர்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கும் இது சரி என்று தோன்றினால் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மந்திர தந்திர வித்தைகள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு சிறிய செம்பு கிண்ணத்தில் இரண்டு பச்சை கற்பூர துண்டுகளும், துளசி, 5 லவங்கங்களையும் போட்டு, அதனுள் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகைகளை போட்டு வைக்கலாம். ஒரு குண்டு மணி தங்கம் இருந்தால் கூட பரவாயில்லை.  அதில் நீங்கள் போட்டு வைத்தால் உங்களுக்கான தங்கத்தை நீங்கள் மேலும் மேலும் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

சின்ன மோதிரம், மூக்குத்தி எதுவாக இருந்தாலும் அதில் போட்டு நீங்கள் நகை வைக்கும் இடத்திலேயே இந்த கிண்ணத்தை வைத்து கொள்ளலாம். பச்சைக் கற்பூரத்தை சாதாரண கடைகளில் வாங்க வேண்டாம். நாட்டு மருந்து கடையில் வாங்குவது நல்லது. இந்த கிண்ணத்தில் வைக்கும் துளசியை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதோடு சேர்த்து 108 என்ற கணக்கில் கிராம்புகளை எடுத்துக்கொண்டு நூலில் கோர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியாவிட்டால் பூ கட்டுவது போல கூட கட்டிக் கொள்ளலாம். ஆக மொத்தத்தில் 108 கிராமங்களையும் கட்டி, ஜபமாலை போன்று தயார் செய்து கொள்ள வேண்டும்.

அந்த ஜெபமாலையை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபடும்போது ‘ஓம் மகாலட்சுமியை நமஹா’ என்ற மந்திரத்தை சொல்லும்போது இந்த லவங்க ஜெபமாலையை உள்பக்கமாக உருட்ட வேண்டும். இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு. பரிகாரத்தை பிடித்தவர்கள் பயன்படுத்தி பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை. சில நாட்கள் இதை செய்து வந்தால் நல்ல பலன் இருப்பதாக தோன்றினால் தொடர்ந்து முயற்சிக்கலாம். பலன் இல்லை என்று நினைப்பவர்கள் விட்டு விடலாம். செய்துவிட்டு பாதியில் நிறுத்தினால் பிரச்சினை வரும் என்ற பயம் எல்லாம் தேவையில்லை.