தசா புத்தி காலத்தில் கெடு பலன் குறைய செய்ய வேண்டிய பரிகாரம்!

171

தசா புத்தி காலத்தில் கெடு பலன் குறைய செய்ய வேண்டிய பரிகாரம்!

ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரம் என்று ஒன்று இருக்கும். அந்தந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு என்று ஜோதிட ரீதியாக ஒரு குறியீடு என்று ஒன்று இருக்கும். ஜென்ம நட்சத்திரத்திற்குரிய படங்களையோ, குறியீடுகளையோ அல்லது உருவபடங்களையோ நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தால் நாம் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி,

27 நட்சத்திரங்களும், அதற்கான குறியீடுகளும்:

  1. அஸ்வினி – குதிரைத் தலை, குதிரை உருவம்.
  2. பரணி – மண் பாத்திரம், அடுப்பு, முக்கோணம்
  3. கிருத்திகை – கத்தி, கற்றை, வாள், தீ ஜூவாலை
  4. ரோஹிணி – தேர், வண்டி, கோயில், ஆலமரம், சக்கரம்
  5. மிருகசீரிடம் – மான் தலை, தேங்காய் கண்
  6. திருவாதிரை – மனித தலை,வைரம், கண்ணீர் துளி
  7. புனர்பூசம் – வில், அம்புக்கூடு.
  8. பூசம் – புடலம் பூ, அம்புக் கூடு, பசுவின் மடி, தாமரை
  9. ஆயில்யம் – சர்ப்பம், அம்மி
  10. மகம் – வீடு, பல்லக்கு, நுகம்.
  11. பூரம் – கட்டிலின் இரு கால்கள், கண்கள், சங்கு, மெத்தை
  12. உத்திரம் – கட்டில் கால்கள், கம்பு, குச்சி, மெத்தை
  13. ஹஸ்தம் – கைகள், உள்ளங்கை
  14. சித்திரை – முத்து, ரத்தினக் கற்கள்
  15. சுவாதி – பவளம், தீபம், புல்லின் நுனி, அசையும் தீபச்சுடர்
  16. விசாகம் – முறம், தோரணம், குயவன் சக்கரம்
  17. அனுசம் – குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
  18. கேட்டை – குடை, குண்டலம், ஈட்டி
  19. மூலம் – அங்குசம், சிங்கத்தின் வால், பொற்காளம், யானை துதிக்கை
  20. பூராடம் – கட்டில் கால்கள், விசிறி, முறம்,
  21. உத்திராடம் – யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்.
  22. திருவோணம் – முழக்கோல் ,மூன்று பாதச் சுவடு, அம்பு
  23. அவிட்டம் – மிருதங்கம், உடுக்கை
  24. சதயம் – பூங்கொத்து, மூலிகை கொத்து
  25. பூரட்டாதி – கட்டிலின் இரு கால்கள், வாள், இரு மனித முகங்கள்
  26. உத்திரட்டாதி – கட்டில் கால்கள், இரட்டையர்கள்
  27. ரேவதி – மீன், மத்தளம்.

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்:-

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.

பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.

பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.

மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

கிரக தசாக் காலங்களில் நற்பலன் தரும் குறியீடுகள் ஒருவருக்கு எந்த கிரகத்தின் தசா நடப்பில் உள்ளதோ அந்த கிரக வாகனத்தின் படத்தை தினமும் பார்த்து வந்தால், அந்த கிரகத்தின் தசாக் காலத்தில் கெடு பலன்கள் குறையும், நற்பலன்கள் அதிகரிக்கும்.

நவ கிரகங்களும் அதன் வாகனங்களும்:-

  1. ராகு – ஆடு.
  2. கேது – சிங்கம்.
  3. சனி – காகம்.
  4. சுக்கிரன் – கருடன்.
  5. சூரியன் – மயில், தேர்.
  6. சந்திரன் – முத்து, விமானம்.
  7. செவ்வாய் – அன்னம்.
  8. புதன் – குதிரை.
  9. வியாழன் – யானை.