தலைமுறை தலைமுறையாக செய்த பாவங்கள் நீங்க பத்ரகாளியம்மன் வழிபாடு!

115

தலைமுறை தலைமுறையாக செய்த பாவங்கள் நீங்க பத்ரகாளியம்மன் வழிபாடு!

தலைமுறை தலைமுறையாக நாம் செய்து வந்த பாவங்கள் நீங்க மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் வழிபாடு செய்தால் பாவங்கள், தோஷங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. நான்கு திசைகளிலும் 4 கோபுரங்களுடன் கூடிய வாசல் அமைக்கப்பட்டுள்ளன.

பத்ரகாளியம்மன் கோயில்:

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் அன்னையில் அஷ்டபுஜங்களில் விஷ்ணு, பிரம்மா, சூலாயுதம், உடுக்கை, வாள், தலை, வலதுகால் மேலூன்றி, இடது காலை அசுரன் மீது ஊன்றி மூக்குத்தியும், பவளமும் ஜொலிக்கும் புன்சிரிப்புடனும் மகுடம், குண்டலமும் அணிந்து அனைவருக்கும் பத்ரகாளியாய் அருள்புரிகின்றாள்.

தோஷம் தீர்க்கும் கோயில்:

மேச்சேரி பத்ரகாளியம்மன்னை தரிசனம் செய்தால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், தோஷங்கள் நீங்கும். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடை, குழந்தையின்மை போன்றவற்றை நீக்கும் கோயிலாக பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் இந்த கோயிலுக்கு சென்று தீர்த்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் மன நோய் நீங்கும் என்பது ஐதீகம். அதோடு, தீய (பேய், பிசாசு) சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து அன்னையின் விபூதியை எடுத்து பூசிக் கொண்டால் தீய சக்திகள் அழியும் என்பது நம்பிக்கை.