திருடு போன பொருளுக்கு கார்த்தவீர்யார்ஜூனர் பரிகாரம்!

219

திருடு போன பொருள் கிடைக்க ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் பரிகாரம்!

திருடு போன பொருள் திரும்ப கிடைக்க வேண்டி ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் வழிபாடு செய்தால், உங்களது பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருட்கள் திருடு போவதில்லை. இதுவரை எங்கிட்ட இருந்து எந்த பொருளும் திருடு போனதில்லை என்று சொல்பவர்களும் உண்டு, என்னிடமிருந்து ஒவ்வொரு பொருளும் திருடு போய் கொண்டே இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. ஜோதிட ரீதியாக திருடு பொருளின் சொந்தக்காரர்களின் ஜாதகத்தில் 6ஆம் வீட்டிற்குரியவர் லக்னத்துக்கு 8 ஆவது வீட்டில் இருந்தால் திருடு போகும் என்பது விதி. விலை அதிகமுள்ள பொருட்கள் திருடு போனால் நாம் முதலில் செய்வது காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பது தான்.

புகார் அளித்த சில வாரங்களிலோ, மாதங்களிலோ உங்களது பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். அப்படியில்லை என்றால், தாமதமாகும். அப்போ என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படுபவர்களை தண்டித்து, திருடிய பொருளை திரும்ப கொடுக்கச் செய்ய இறைவனிடம் முறையிடுவோம்.

சனிக்கிழமை தோறும் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு 9 சூடத்தை ஒவ்வொன்றாக ஒன்றின் மீது ஒன்று வைத்து சூடம் ஏற்றி, தென் திசை சூடத்தைப் பார்த்து நின்று கொண்டு எமதர்மராஜாவை நினைத்து திருடு போன திரும்ப கிடைக்க வேண்டும் என்று உங்களது கோரிக்கையை சொல்ல வேண்டும். இது போன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் சொல்லி வர 9ஆவது சனிக்கிழமைக்குள் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

திருடு போன பொருள் திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜூனர் வழிபாடு செய்ய வேண்டும். அத்ரி முனிவரின் புதல்வரான ஸ்ரீ தத்தாத்ரேயரின் சீடர் தான் இந்த கார்த்தவீர்யாஜூனர். இவர், அத்ரி முனிவரிடம் அனைத்து வித்தைகளையும் கற்று, மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கி ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார்.

கார்த்தவீர்யார்ஜூனரை, ஆயுரம் கையுடையான் என்றும், ஷத்ரீய மாமன்னர் என்றும், ராஜ ராஜேஸ்வரன் என்றும், பரசுராமரிடம் போரிட்டு தோல்வி அடைந்தவர் என்றும், மகாராஜா என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் பச்சைக் கல்லில் 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதோடு, 16 திருக்கரங்களில் 16 விதமான ஆயுதங்களுடன் பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், சங்குசக்கரத் தாரியாக 16 செல்வங்களும் கிடைக்கப் பெறும் வகையில் நின்று கொண்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனரை வழிபடுவதன் மூலம் திருடு போன பொருளோ அல்லது காணாமல் போன நபரோ திரும்ப கிடைப்பர். இழந்த செல்வத்தை திரும்ப பெறலாம். அடகு வைத்த நகையை மீட்கலாம், நிலத்தை மீட்டுக் கொள்ளலாம், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், கடன் பிரசசனை தீரும், வாழ்வில் 16 வகையான செல்வங்களை பெற்று பெறு வாழ்வு வாழலாம்.

தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைக்கும் மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம

கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்

தஸ்ய ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்:

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே

மஹாசூஷ்மாய தீமஹி

தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்!