திருமண வரன் அமைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

123

திருமண வரன் அமைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

ஒருவர் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு திருமணம் நடப்பதில் தடை ஏற்படும். அதே போன்று, சூரிய தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றால் கூட திருமணம் நடைபெறாது. திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாமல் அவதிப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

பொதுவாக தோஷம் என்று இருந்தால், அதற்கு பரிகாரங்கள் என்று ஒன்று இருக்கும். அப்படி திருமணம் நடைபெறாமல் தொடர்ந்து தோஷத்தால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்…

  1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
  2. ஏழைப் பெண்ணிற்கு எண்ணெய் ஸ்நானம் செய்து தகுதிக்கு ஏற்ப புதிய ஆடை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டால், திருமணம் விரைவில் நடைபெறும்.
  3. திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மனை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.
  4. வேப்ப மரத்தடி விநாயகருக்கு வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று பஞ்ச தீப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.
  5. வாரந்தோறும் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர திருமணம் கை கூடும்.
  6. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலுள்ள நாகமூர்த்திகளை வெள்ளி மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டு வர வேண்டும். மேலும், ஏழைப் பெண்களுக்கு மாங்கல்ய சரடு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் சகல திருமண தோஷங்களும் தீரும்.
  7. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், அபிஷார தோஷம், பிரேத சாபம், தேவ தோஷம் ஆகிய 6 தோஷங்களாலும் திருமணம் தடைபடுகிறது. இதற்கு கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதமிருந்து வழிபட்டு வர 6 தோஷங்களும் நீங்கி திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
  8. செவ்வாய் தோஷத்தால் திருமணம் நடைபெறவில்லை எனில், வைத்தீஸ்வரன் கோயிலுள்ள முத்துக்குமார சுவாமியை முருகனை வணங்கி வழிபட்டு வர திருமணம் நடந்து முடியும் என்பது ஐதீகம்.
  9. பன்னை மரத்தைச் சுற்றி வணங்கி வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்
  10. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டு வர வேண்டும். துர்க்கையை வழிபாடு செய்தால் திருமண வரன் அமைந்து விரைவில் பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.