தீய சக்தி அண்டாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

82

தீய சக்தி அண்டாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

வீட்டில் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு , அமைதி இல்லாத நிலை, ஒருவர் மாறி ஒருவருக்கு உடல் உபாதைகள், கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம், இரவு உறங்கும் நிலையில் பக்கத்தில் ஏதோ கரும் உருவம் இருப்பது போன்ற எண்ணம், தொடர்ந்து பணம் பொருள் விரயங்கள், எதற்கு எடுத்தாலும் பயம் இப்படி அடுக்கடுக்காக சிக்கல்கள் சில நேரம் நம்மை வாட்டி வதைக்கும்.

சோதனை மேல் சோதனைகள் வரும் போது வீடே வேதனை வாட்டத்தில் சிக்கி சீரழிகிறது. தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபாடு காட்ட மறுக்கிறது. மனதில் வெறுப்பும் வெறுமையும் வாட்டுகிறது என்றால் ஏதாவது தீய சக்தி நம் மீது ஏவப்பட்டிருக்கலாம். அல்லது நாம் வசிக்கும் இடத்தில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணிக்க, தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது. எலுமிச்சை மாலை செய்து  துர்கா தேவிக்கு மாலையாய் போட்டு பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றிய பிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். மேலும் ஒரு வாரத்திற்கு பின் நல்லெண்ணெய்  மற்றும் வேப்பெண்ணெயை சமமாக கலந்து, தீபம் ஏற்ற வேண்டும். 3 மாதங்கள் தொடர்ந்து செய்திட தீவினைகள் நீங்கும்.

தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது. நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடமும் செய்வினை பலிக்காது.

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி இப்படி நம்மை வாட்டி வதைக்கும்  தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட…

ஒரு எளிய முறை:

வெண்கடுகு 250 கிராம், நாய்க்கடுகு 250 கிராம், மருதாணி விதை 250 கிராம், சாம்பிராணி 250 கிராம், அருகம்புல் பொடி 50 கிராம், வில்வ இலை பொடி 50 கிராம், வேப்ப இலை பொடி 50 கிராம். இந்தப் பொருட்கள்  நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.

இந்தப் பொருட்களில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 விதமான பொடிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பத்திரப்படுத்த வேண்டும். இந்தக் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சாம்பிராணி புகையைப் போடுவது போல தூபம் போட செய்வினை தீமைகள் நம் வீட்டை விட்டு வெளியேறி நம் வாழ்க்கையில் அமைதி பிறக்கும். இந்த பரிகாரம் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செய்ய பெரிய நல்ல மாற்றத்தை நிச்சயமாக உணர முடியும்.

இவை எல்லாவற்றையும் விட, தெய்வ நம்பிக்கையை உறுதியுடன் கடைப்பிடிக்க எந்த தீமையும் நம்மை அணுகாது.