துஷ்ட சக்திகளை விரட்டும் வேப்பிலை பரிகாரம்!

160

துஷ்ட சக்திகளை விரட்டும் வேப்பிலை பரிகாரம்!

கூலுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை, வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அம்மனின் வாக்கு. பெரும்பாலான அம்மன் கோயில்களில் வேப்பிலை தான் பிரசாதமாக கொடுக்கப்படும். வேப்பிலை என்பது அம்மனுக்குரிய மரம். வேப்ப மரத்தை சக்தியின் ரூபமாகவே பலரும் வழிபாடு செய்வார்கள். வேப்பிலையின் கசப்புத் தன்மை நமது உடலில் உள்ள நோய்களை மட்டுமல்லாமல், துஷ்ட சக்திகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும், நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டியடிக்கும்.

வேப்பிலையை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைத்து தூள் தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் வீட்டில் தூபம் போடும் பொழுது இந்த வேப்பிலை தூளையும் சேர்த்து தூபம் போட்டால், அது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டியடிக்கும்.

நாம் நினைத்த காரியங்கள் அனைத்தையும் இந்த வேப்பிலை நமக்கு நிறைவேற்றித் தரும் என்பது ஐதீகம். வீட்டில் வேப்பிலை தூள் சேர்த்து தூபம் போடும் போது மனதில் நினைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.