நாகதோஷம் போக்கும் முண்டக்கண்ணியம்மன்

167

கடுமையான நாகதோஷம் இருந்தால் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.

முண்டக்கண்ணியம்மன்ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனை சரஸ்வதி தேவியின் மறு உருவமாகவும் பக்தர்கள் கருதுகிறார்கள். 23 விளக்கு ஏற்றி வைத்து முண்டகக்கண்ணி அம்மனை மனம் உருக வழிபட்டால் தேர்வில் சாதனை படைக்கும் அளவுக்கு முதன்மை மதிப்பெண் பெற முடியும் என்று மாணவ-மாணவிகளிடம் நம்பிக்கை உள்ளது.
நாக தோஷமாப உடனே செல்லுங்கள்

கடுமையான நாகதோஷம் இருந்தால் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வசதி இருப்பவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும்.

பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்

முண்டக்கண்ணி அம்மன் ஆலயத்தில் உள்ள நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய் விளக்கு தீபம் ஏற்றி கையில் வைத்து தீபாரதனை காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம். அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.