நாக தோஷத்தை நீக்கும் கருடன் வழிபாடு!

141

நாக தோஷத்தை நீக்கும் கருடன் வழிபாடு!

கருடனுக்கு கருடாழ்வார் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கருடனை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். திருமாலின் வாகனமாக விளங்குபவர் கருடன். தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.

கோயிலிலும், வீட்டிலும் கருடனை வணங்குவதன் மூலமாக நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். மேலும், தீராத நோய்களும் தீரும்.

பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் முதலில் கருடனை வழிபட்ட பின்னரே, மூலவரை வழிபட வேண்டும். கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த நிகழுவு முழுமையடைகிறது.

நாட்களும் அதற்குரிய பலன்களும்:

ஞாயிறு: நோய் நீங்கும்

திங்கள்: குடும்பம் செழிக்கும்

செவ்வாய்: உடல் பலம் கூடும்

புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும்

வியாழன்: நீண்ட ஆயுளை  பெறலாம்

வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும்

சனி: மோட்சம் கிடைக்கும்