நான் வெளிநாடு செல்வேனா? கடல் தாண்டும் யோகம் தரும் மறைமுக வீடுகள்

203

உலகமயமாக்கலுக்கு பின் தமிழ் மக்கள் இல்லாத நாடு இல்லாத நிலை உருவாகி உள்ளது . நம் மக்கள் சர்வ சாதாரணமாக தொழில் மற்றும் கல்வி காரணமாக வெளிநாடு செல்லும் நிலை அதிகரித்து விட்டது . சுந்தர் பிச்சை கூகிளின் CEO ஆகவும் , இந்தியா வாமாசாவளியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் பல அரசு பதவிகளில் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது . உலகம் சுருங்கி விட்ட நிலையில் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழமொழி உண்மையாவதை காண முடிகிறது .

பெரும்பாலும் இன்ஜினியரிங் முடித்த இளம் பருவத்தினர் , கீழ் திசை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்றோ அல்லது வளைகுடா நாடுகளான குவைத் , சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கோ சென்று ஒரு 10 வருடம் வேலை செய்து வந்து தமது சொந்த ஊர்களில் தொழில் தொடங்க செய்யும் வழக்கமும் அதிகரித்து வருகிறது . ஒருவர் சொந்த நாடு விட்டு பரதேசம் செல்லும் நிலை ஏன் ஏற்படுகிறது ? மேலும் இன்றய இளைஞர்கள் அமெரிக்கா , கனடா போன்ற மேல் திசை நாடுகளுக்கு சென்று படித்து அங்கே வேலைவாய்ப்பை பெற்று கொண்டு சொந்த வீடு மற்றும் குடியுரிமை வாங்கி கொண்டு இறுதி காலம் வரை கழிப்பதையும் பார்க்க முடிகிறது , ஒருவர் அயல் நாடுகளிலே தனது வாழ்நாளை கழிப்பதுக்கு என்ன ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை காண்போம் . நீங்கள் அல்லது உங்கள் மகன் / சகோதரன் / நண்பர் வெளிநாடு சென்று பிழைப்பாரா என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால் , +91 9677824799 என்ற வாட்சப் எண்ணுக்கு தொடர்ப்பு கொண்டு நமது வாட்சப் ஜோதிடர் கிரியை தொடர்ப்பு கொண்டு ஆலோசனை பெறலாம் குறைந்த கட்டணத்துடன் .

வெளிநாடு செல்ல வைக்கம் கிரக நிலை :

1. பொதுவாக தூர இடம் மற்றும் பரதேச வாசத்தை குறிப்பவை நமது பிறந்த ஜாதகத்தில் உள்ள 8 மற்றும் 12 ஆம் வீடுகளே ஆகும் . ஒருவரின் ஜாதகத்தில் 8 மற்றும் 12 ஆம் இடங்கள் சுபத்துவமாகி , சர ராசியில் இருக்கும் கிரகங்களின் தசை நடந்தால் அவர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு செல்ல இயலும் . அடுத்து சர ராசியில் இருக்கும் கிரகங்களின் தசை நடந்தால் அவர் வெளிநாட்டில் நீடித்து இருக்க முடியும் . சர ராசிகளான மேஷம் , கடகம் , துலாம் , மகரம் போன்றவை இயக்கத்தை குறிப்பதால் , அந்த ராசிகளில் வரும் தசா மற்றும் புக்திகளின் பொது வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும் .

2. ஒருவரின் ஜாதகத்தில் 8 மற்றும் 12 இடங்கள் சுப ஒளி தொடர்ப்புடன் இருந்து , அதன் அதிபதிகளும் சுப தொடர்ப்புடன் இருந்தால் , வெளிநாட்டில் இறுதி காலம் வரை நீடித்து இருக்க முடியும் , அவருக்கு குடியுரிமையும் கிடைக்கும் . ஒருவர் வெளிமாநிலம் செல்வரா ? அல்லது வெளிநாடு செல்வாரா என்பதை காண , அவரின் கடகம் மற்றும் மீனத்தின் நிலையை பரிசோதிக்க வேண்டும் .

3. மேல் சொன்ன அமைப்புகளுக்கு சிம்மம் சுப தொடர்ப்புடன் இருக்க கூடாது , சிம்மம் சுப தொடர்புடன் இருந்தால் சொந்த ஊரில் பிழைக்கும் நிலை ஏற்படும் . இதற்கு விதிவிலக்கு சிம்மம் 8 மற்றும் 12 ஆம் இடமாக இருப்பது .

அனைவர்க்கும் எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசியுடன் , எல்லாம் கிடைக்க பெற்று மன நிறைவுடன் வாழ்க .