நினைத்த காரியம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

73

நினைத்த காரியம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

நாம் நினைக்கும் காரியம் நடக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதே இல்லை. அப்படி நடக்காமல் இருக்கும் போது தான் கடவுளை நினைத்து பார்கிறோம், அவரிடம் செல்கிறோம்.

கடவுள் சோதனைகளை கொடுப்பதே நாம் உலகத்தில் நீதி, நேர்மையுடன் வாழுகிறோமா என்பதை அறிவதற்காக தான். துன்பம் வரும் போது தீயது செய்யவும் தோன்றும். எது சரி? எது தவறு? என்று பார்க்கும் பக்குவம் நீங்கி விடும். எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு நீதியின் பக்கம் நின்றால் தான் மகிழ்ச்சியை நிரந்தரமாக அனுபவிக்க முடியும்.

இதற்கு இறைவனை நினைந்து மனதார வேண்டினால் போதும். அவர் நிச்சயம் கை கொடுப்பார். இறை சக்தியை பெற்றுக்கொள்ள வீட்டில் நாம் என்ன செய்யலாம் என்று இங்கு பார்ப்போம். இறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் ஒரு சில பொருட்களுக்கு உண்டு. அதில் ஒன்று தான் தர்பை. எண்ணற்ற அபூர்வ சக்திகள் கொண்ட ஒரு அற்புத மூலிகை தர்பை புல். கும்பாபிஷேகத்தில் கலசம் உள்ளே நிரப்பும் முக்கிய பொருட்களில் ஒன்றாக தர்ப்பை விளங்குகிறது.

மேலும் சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. ஏனென்றால் தர்ப்பையானது புனிதத்தன்மையை தருகின்றன. நமது உடலில் உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. இந்த தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும் எனவே தான் நாம் எந்த ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து, கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம். அத்தகைய சக்தி வாய்ந்த தர்பை புல் ஒன்றை முழுமையாக எடுத்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தாயத்து ஒன்றை வாங்கி நிறைந்த பௌர்ணமி தினத்தில் மாலை பூஜை வேளையில் பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த தர்பை புல்லை சிறிய அளவில் சரியான முறையில் சீராக மடித்து கொள்ள வேண்டும். பின்னர் மடித்த அந்த தாயத்தினுள் தர்பை புல்லை நுழைத்து விட வேண்டும். அதனுடன் சுத்தமான விபூதி சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக இருக்கமாக மூடி விட வேண்டும். இந்த தாயத்தை கைகளில், கழுத்தில் அணிந்து கொண்டால் இறை சக்தி ஈர்க்கப்பட்டு உங்களுடைய உண்மையான வேண்டுதல் கடவுளிடத்தில் கொண்டு சேர்க்கும். நினைத்த காரியங்கள் கை கூடும். ஆனால் உங்களுடைய வேண்டுதல் நன்மைக்காக இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் உங்களையே பின் தொடரும். தீவினை உங்களையே பின் தொடரும். எனவே எண்ணங்கள் நல்லனவாக இருக்க வேண்டும்.

நன்மைக்காக வேண்டிய வேண்டுதல் கட்டாயம் இதன் மூலம் நிறைவேறும். சுத்த விபூதியில் ஈச சக்தி அடங்கியுள்ளது. விபூதி தர்பையுடன் சேர்ந்து நமக்கு இறை ஆற்றலை பெற்றுத்தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது.