நீதிமன்ற வழக்குகளில் ஜெயிக்க பரிகாரம்!

165

நீதிமன்ற வழக்குகளில் ஜெயிக்க பரிகாரம்!

தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, தப்பே செய்யாதவனுக்கு இந்த காலத்தில் தண்டனை கிடைக்கிறது. எல்லோரையும் சொல்லவில்லை. தினந்தோறும் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் வரும் தகவல்களை கொண்டு தான் சொல்லப்படுகிறது. இதில், முக்கியமாக இருப்பது போலீஸ்காரர்கள்தான். சரி, நாம் பதிவுக்கு செல்வோம்.

பொதுவாக நீதிமான் என்றழைப்படுபவர் சனி பகவான். இவரது பார்வையில் தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்கவே முடியாது. தப்பு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனையும் உண்டு. அது, அவர்கள் செய்த பாவங்களைப் பொறுத்து மாறுபடும்.

பரிகாரம் 1:

உங்களது வழக்கு நடக்கும் காலம் முழுவதும் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நவக்கிரக சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி சனீஸ்வரனுக்குரிய சங்கடந் தீர்க்கும் சனி பகவானே என்ற நவக்கிரக மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

பரிகாரம் 2:

அதோடு, சனி பகவானுக்குரிய வாகனமான காகத்திற்கு ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக அன்னமிட்டு சனி பகவானை வணங்கி வர நீதிமன்ற வழக்கு தீர்ப்பு உங்களது சாதகமாக முடியும்.

பரிகாரம் 3:

வாய்தாவிற்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்வதற்கு முன்னதாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று 2 நெய் தீபங்கள் ஏற்றி லட்டு நைவேத்தியம் படைத்து ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். அப்போது, அனுமன் சாலீசா மந்திரம் படித்து வழிபட வேண்டும். நீங்கள் படைத்த லட்டுகளை பிரசாதமாக கொடுத்துவிட்டு ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றால் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

பரிகாரம் 4:

நீதிமன்றத்திற்கு செல்லும் போது உங்களுடன் அரிசியையும் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களது வழக்கு நடைபெறும் அறையின் முன்போ அல்லது நீதிமன்ற வாசலின் முன்போ யாரும் பார்க்காத போது சிறிது அரிசியை தூவி விட வேண்டும். அப்படி செய்தால் வழக்கு எளிதில் முடியும். உங்களுக்கு சாதகமாகவும் வரும்.

பரிகாரம் 5:

வழக்கு விசாரணைக்கு வரும் போது நீங்கள் கருப்பு நிற ஆடை அல்லது மற்ற நிறங்களின் அடர்வண்ண ஆடைகளை அணிந்து சென்றால் வழக்குகளில் வெற்றி கிட்டும். இதனை ஒவ்வொரு முறையும் செய்து வர வழக்கு எளிதில் முடிந்து உங்களுக்கு சாதகமாகவும் அமையும்.