பணப்பிரச்சனைக்கு தீரும் வெள்ளிக்கிழமை பரிகார ரகசியம்!

147

பணப்பிரச்சனைக்கு தீரும் வெள்ளிக்கிழமை பரிகார ரகசியம்!

எந்த ஒரு மங்களகரமான விஷயத்தை தொடங்கினாலும் அதை, ஏன் வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும்! என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்? பொருளாதாரப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை அன்று உங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை வைத்து என்ன பரிகாரம் செய்யலாம்? இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் வெள்ளிக் கிழமையில் என்ன சூட்சம ரகசியம் மறைந்திருக்கிறது என்பதை பார்த்து விடலாம்! நம்முடைய உடலில் உயிர் அணுக்கள் அதிகப்படியாக, வெள்ளிக்கிழமை அன்று உற்பத்தியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. உயிரணுக்கள் உற்பத்தியாகும் இந்த வெள்ளிக்கிழமை நாளில், நாம் மனதார எதை ஒன்றை நினைத்து பூஜை செய்கிறோமோ, மனதார எதை நினைத்து வேண்டிக் கொள்கின்றோமோ, அது நம் உயிரணுக்களோடு சேர்ந்து, அந்த நினைவு, அந்த குறிக்கோள், நம்முடைய உடம்பில் இரத்தத்திலும், திசுக்களிலும், கலந்து நமக்குள் ஆழமாக பதிந்து விடுகின்றது.

ஆகவே, வெள்ளிக்கிழமை தினத்தில் நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆன்மிகமும், அறிவியலும் வேறு வேறு இல்லை என்பதற்கு கூட இது ஒரு உதாரணமாக சொல்லலாம். சரி. இந்த வெள்ளிக்கிழமையில், நம்முடைய பொருளாதார பிரச்சினையை சரி செய்ய என்ன செய்யலாம்? அதாவது, நம் வருமானத்தை பெருக்கிக்கொள்ள, நம் கையில் வைத்திருக்கும் ஏதாவது ஒரு, ரூபாய் நோட்டை வைத்து தான் இந்த சுலபமான பரிகாரத்தை செய்யப்போகின்றோம்.

உங்கள் கையில் இருக்கும் 100 ரூபாய் நோட்டில் இருந்து, 2000 ரூபாய் நோட்டு வரை உங்களால் எந்த நோட்டை வைத்து பரிகாரம் செய்ய முடியுமோ அந்த நோட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு 100 ரூபாய் வைத்துக் கொள்ளலாம். முதலில் 5 கிராம்பு, 5 சிறிய பட்டை துண்டு (ஒரு பட்டை துண்டை எடுத்து ஐந்து சிறு துண்டுகளாக உடைத்துக் கொண்டாலும் போதும்), எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பச்சை கற்பூரம், பேரம் பேசாமல் வசம்பை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மொத்தமாக நான்கு பொருட்கள்.

கிராம்பு, பட்டை, பச்சை கற்பூரம், வசம்பு, இந்த 4 பொருட்களையும் உங்கள் கையில் இருக்கும், 100 ரூபாய் நோட்டின் உள்ளே வைத்து கீழே விழாமல் மடித்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டை அப்படியே, ஒரு வெள்ளைக் காகிதத்தில் வெளியில் தெரியாமல் பொட்டலமாக மடித்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்யப் போகிறீர்கள் அல்லவா? குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று காலை 06.00 – 6.15 மணிக்குள், அல்லது மதியம் 01-1.15 மணிக்குள், அல்லது இரவு 08 – 8.15 மணிக்குள் இந்த நேரத்தில் உப்பு வாங்க வேண்டும். வீட்டில் இருந்து உப்பு வாங்க செல்லும் நேரம் கணக்கு இல்லை. கடையில், காசு கொடுத்து உப்பு வாங்கும் நேரம் மேற் குறிப்பிட்டுள்ள மூன்று நேரங்களில் ஒரு நேரமாக இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நேரத்தில், வாங்கி வந்த உப்பை, ஒரு கைப்பிடி அளவு உங்கள் உள்ளங்கையில் வைத்து, மகாலக்ஷ்மியை மனதார நினைத்து ‘ஓம் மகாலட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு விடுங்கள். அதன் பின்பு, நீங்கள் தயார் செய்து, வெள்ளை தாளில் மடித்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா?

நூறு ரூபாய் நோட்டு, அந்த நோட்டையும் அந்த கண்ணாடி பௌலில் போட்டு உங்கள் வீட்டு பீரோவில் எடுத்து வைத்துவிடுங்கள். நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். தவறொன்றுமில்லை. கடையிலிருந்து காசு கொடுத்து, உப்பு வாங்கும் நேரம்தான், குறிப்பிட்ட மேலே சொல்லப்பட்டுள்ள அந்த 3 நேரங்களும்.

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால், வேலை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், அந்த பிரச்சனைகள் விரைவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். பணம் மேலும் மேலும் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். உங்கள் வீட்டில் பண கஷ்டம் தீர்ந்து, வருமானம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.