பறவைகளை வீட்டில் வளர்த்தால் பட்சி தோஷமா?

76

பறவைகளை வீட்டில் வளர்த்தால் பட்சி தோஷமா?

சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. யார் ஒருவர் மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறாரோ அவருக்கு பிரச்சனை தான். அது போன்று தான் பறைகளுக்கும் சுதந்திரம் உண்டு. அதனைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்து வைக்க பார்த்தால் அது தப்பித்து செல்லத்தான் பார்க்கும். தனது இனத்தோடு இனமாக சுற்றித்திரிந்து மகிழ்ச்சியாக பறந்து கொண்டே இருக்கத்தான் பறவைகள் ஆசைப்படும்.

அப்படிப்பட்ட பறவைகளுக்கு இறை போட்டு அதனை கூண்டிற்குள் அடைத்து வைத்தால் பட்சி தோஷம் உண்டாகும். அதோடு, பட்சி சாபமும் உண்டாகும். வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு உணவு மட்டும் வழங்கி வந்தால் அது ஆனந்தம். இவ்வளவு ஏன் அது புண்ணியமும் கூட. ஆனால், அதே பறவைகளை கூண்டுக்குள் வைத்து உணவளித்து வந்தால் அந்து தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷம் நீங்க ஒவ்வொரு கோயிலாக சென்று பரிகாரம் செய்ய வேண்டி வரும்.