பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

66

பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நமது உடலில் பல்லி விழுந்தால் நன்மைகளும், தீமைகளும் உண்டாகும். நன்மையாக இருந்தால் நன்மை. அதுவே தீமையாக இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம். நமது உடலில் பல்லி எங்கு விழுந்தாலும் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் நன்கு குளித்து முடித்துவிட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களது வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன் ஜெய மந்திரத்தை சொல்லி வந்தால் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

பசுவின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள். இதனால், பசு மாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்டால் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்கும். கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும், சித்த வைத்தியத்தில் மருந்தாகவும் இந்த பஞ்சகவ்யா திகழ்கிறது.

வசதியுள்ளவர்கள் தங்கம் அல்லது தங்க ஆபரணங்களை கோயிலுக்கு தானமாக கொடுத்தால் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றி வழிபட பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

இதையெல்லாம் விட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியை வழிபட வேண்டும். மேலும், அதனை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது மற்றும் சனி ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறையும்.