பாம்பு வாங்கி காட்டில் விட கெடு பலன் குறையும்: நவக்கிரக சாந்தி பரிகாரம்!

209

பாம்பு வாங்கி காட்டில் விட கெடு பலன் குறையும்: நவக்கிரக சாந்தி பரிகாரம்!

ஒருவரது ஜாதகத்தில் அவரது கிரக நிலைகளைப் பொறுத்து அவருக்கு பலன்கள் அமையும். ஜாதகத்தில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களிலிருந்து நிரந்த தீர்வு காண சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. இது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்….

நவக்கிரக சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:

சூரியன்:

7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிறு அன்று பொடி செய்து, அதனை எறும்புகளுக்கு போட வேண்டும். இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரிய பகவானால் உண்டாகும் கெடு பலன்கள் குறையும்.

சந்திரன்:

வளர்பிறை திங்களன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு வைத்து அதில் பழைய வெல்லம் போட்டு விட சந்திர பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும்.

செவ்வாய்:

ஒவ்வொரு தேய்பிறை செவ்வாய் கிழமை அன்று புதிதாக இனிப்பு வாங்கி அதனை பிச்சை எடுப்பவர்களுக்கு தானமாக கொடுக்க செவ்வாய் பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

புதன்:

பூஜையறையில் கங்கா தீர்த்தம் வைத்தால் புதன் பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

குரு:

வியாழன் தோறும் குங்குமப் பூவை அரைத்து, அதனை நெற்றியில் பொட்டு மாதிரி வைத்து வர குரு பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

சுக்கிரன்:

சின்ன வெண்ணிற பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதனை ஓடும் தண்ணீரில் விட சுக்கிர பகவானால், ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

சனி:

வீட்டிற்கு பின்புறம் ஒரு முற்றத்தில் கறுப்பு துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து தீயில் போட்டு எரித்தால் சனி பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

கேது:

வேறு வேறு நிறத்தில் 2 போர்வைகளை வாங்கி அதனை ஏழை எளிய முதியவர்களுக்கு அல்லது பிச்சைக்காரர்களுக்கு தானமாக கொடுத்தால் கேது பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும்.

ராகு:

பாம்பாட்டிகளிடமிருந்து பாம்பு விலைக்கு வாங்கி அதனை காட்டில் விட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக ராகு பகவானால் ஏற்பட்ட கெடு பலன்கள் குறையும். பாம்பு வாங்கி விடும் போது நாக பஞ்சமி நாளில் செய்ய நன்மைகள் நடக்கும்.