பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு

180

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பரணி தீப வழிபாடுமனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். அங்ஙனம் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் பலர் அடியெடுத்து வைக்கின்றனர்.

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்றுவீதம் ஏற்றி வைப்பது மரபு.

வீட்டில் நல்லெண்ணெய்யிலும், முருகன் முன்னிலையில் இலுப்பை எண்ணெய்யிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும்.

மேலும் கார்த்திகை திங்கட்கிழமையில் வரும் சோமவாரம் சிறப்பு மிக்கது என்பதால், அன்றைய தினம் சிவாலயங்களில் சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். எனவே பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறும் நாளில் ஆலய தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.