பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!

185

பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதம் எப்படி முக்கியமானதோ அதே போன்று தான் ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை நாள். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் என்று சிறப்பு பெற்றுள்ளது.

முன்னோர்களுக்கான கடன்:

பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். விஷ்ணு காக்கும் தொழில் செய்பவர். சிவன் அழிக்கும் தொழில் செய்பவர். மகாபாரதத்தின் படி, ஒவ்வொரு ஆத்மாவும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோருக்கு கடன்பட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் பித்ரு கடன் (பித்ரு தோஷம் – முன்னோர்களுக்கான கடன்). இது பிரம்மாவிற்கு கடன்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இதன் காரணமாக, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். இதன் விளைவாக முன்னோர்களுக்கான கடன் அழிக்கப்படுகிறது.

எனவே முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதன் மூலம் இந்த கடன் அழிக்கப்படுகிறது. பித்ரு தோஷம் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  1. அமாவாசை நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, எள்ளு, பச்சரிசி வெல்லம் ஆகியவற்றை கலந்து கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். மேலும், அன்னதானமும் செய்யலாம்.
  2. பால் கொண்டு நரசிம்மரை வழிபட்டு வர பித்ரு தோஷம் நீங்கும்.
  3. திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி, புனர்பூசம், பூசம், அனுஷம், விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் அமாவாசை வந்தால், அன்று சிராத்தம் செய்தால் அல்லது காளஹஸ்தி சென்று பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நீங்கும்.
  4. அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் கூட பித்ரு தோஷம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.