புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

155

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தடை ஏற்படும். ஒருவேளை புணர்ப்பு தோஷம் இருந்து திருமணம் நடந்துவிட்டால் அந்த திருமணம் பிரிவில் சென்று முடிகிறது. அதோடு மட்டுமல்லாமல் பலருடன் பழக்கம் ஏற்படும் நிலையையும் கொடுத்து விடுகிறது. ஜாதகத்தில் புணர்ப்பு தோஷம் ஏற்பட்டவர்கள் பொது வாழ்விலும் சரி, ஆன்மீகத்திலும் சரி அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பதால் அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்களது குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் போய்விடுகிறது. இதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

புணர்ப்பு தோஷம் நீங்க பரிகாரம்:

  1. குரு பார்வை – சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் தோஷம் கிடையாது.
  2. குரு வீட்டில் சந்திர சனி சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது தோஷமில்லை.

பரிகாரம்:

  1. சனிக்கிழமையில் சந்திர பகவானுக்குரிய ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதி தரிசனம் செய்வது சிறப்பு.
  2. சனிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாளில் சத்திய நாராயண விரத பூஜை மேற்கொண்டால் சனி – சந்திர பகவான் சேர்க்கையால் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு உண்டாகும்.
  3. சந்திரன் குரு வீடான தனுசு ராசிக்கு வந்ததைத் தொடர்ந்து சனி – சந்திர சேர்க்கை நீங்கியதோடல்லாமல் சூரியனின் சம சப்தம பார்வையால் பௌர்ணமி யோகம் பெறுகிறது. அதோடு, செவ்வாய் பகவான் சம சப்தமாக பார்த்து சந்திர மங்கள யோகத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.